உங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேற ஒரு பொன்னான வாய்ப்பு ( A must read Article)

 
குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக நமது இந்து மதம் கூறுகிறது.
தேவ லோகத்தில் இவர்தான் கஜானாவுக்கு இன்சார்ஜ். இவருக்கு முறைப்படி பூஜை செய்து வழிபட , அவர் நமக்கு செல்வத்தை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. நம்ம நாட்டில, தங்க கடை வைச்சு இருக்கிற எல்லா சேட்டுக்களும் தவறாமல் - குபேர பூஜை செய்பவர்கள்.

அப்படிப் பட்ட குபேரன் , வடக்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் இந்த நிலையை அடைய - அண்ணாமலையில் சிவலிங்கத்தை நிறுவி , சிவனை நினைத்து தவம் செய்து இருக்கிறார். அப்படி அவர் நிறுவிய லிங்கம் தான், குபேர லிங்கம்.

இந்த குபேர லிங்கத்தை - குபேர பகவான் - சில குறிப்பிட்ட தினங்களில் வழிபாடு செய்து , சிவன் அருளைப் பெறுவதாக நம்பப்படுகிறது. அப்படி அவர் , வெகு நிச்சயமாக பூஜை செய்யும் நாள் பற்றி , இப்போது பார்க்க விருக்கிறோம்.

நமக்கும் குபேர சம்பத்து வேண்டும் அல்லவா? அப்படி சூட்சுமமாக குபேரன் பூஜை செய்யும் வேளையில் - நாமும் அங்கு இருந்தால், அவர் பார்வை நம் மீதும் விழக்கூடும்.. குபேரன் பூஜை செய்வதால் - அந்த அண்ணாமலையாரும் அந்த வேளையில் அங்கு ஆனந்தமாக வீற்று இருக்கக் கூடும்...


உங்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக , ஒரு சுமுகமான நிலை வர வேண்டும் என்று விரும்பினால் , குபேரலிங்கத்திடம் , உங்கள் நியாயமான கோரிக்கையை வையுங்கள்.

உங்கள் ஜாதக அமைப்புப் படி - கிடைக்கும் பலன்கள் , முன்னே பின்னே தாமதப் பட்டாலும், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட - ஒரு படி நிச்சயம் முன்னேறுவீர்கள்.


கிரிவலம் செல்லும்போது எவரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவும். 
எல்லா நாளுமே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது , மிக மிக நல்ல காரியம். இந்த நாளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது உண்மையோ , பொய்யோ - பௌர்ணமி அல்லாத ஒரு சாதாரண நாளில் , நிம்மதியாக - சுற்றி இருக்கும் கூட்டத்தின் தொந்தரவு இல்லாமல் , மன அமைதியுடன் கிரிவலம் வர முடியும். அஷ்ட லிங்கங்களை கண் குளிர தரிசனம் செய்ய முடியும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com