தமிழ் ஜோதிடம்: ஜோதிட அடிப்படை - உதய லக்னம் – ஜென்ம லக்னம்.

இந்த பிறவியின் பிறந்த நேரத்தினை கணக்கிட ஜென்ம லக்னம் பயன்படுகிறது. லக்னம் என்பது முதல் வீடாக ஒரு ஜாதகத்தில் கணக்கிட படுகின்றது. அதுவே உயிர் ஸ்தானம் மற்றும் லக்னம் என்று அழைக்கப்படுகின்றது.

உதய லக்னம் – ஜென்ம லக்னம்.

லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் . ஒருவருக்கு ஜென்ம லக்னம் என்பது எந்த ராசியில் வேண்டுமானாலும் அமையலாம். பொத்தம் பொதுவாக ராசியை மட்டும் வைத்து ஒரு ஜாதக பலனை பார்க்க முடியாது. ஒருவருக்கு எந்த ராசியில் வேண்டுமானாலும் லக்னம் அமையும். அதாவது ஒருவர் பிறந்த மாதத்தை கொண்டு லக்னம் முடிவு செய்துகொள்ளலாம். உதாரணமாக சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு மேஷம் லக்னமாக அமையும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்திற்கு பொறுப்பேற்கிறது.

உதய லக்னம் என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது சூரியன் உதயத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுதான் உதயலக்னம். சூரியனின் உதய நேரம் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வரும் . சூரியனின் உதயநேரம் பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இன்றைய உதய நேரம் மணி என்றால் நாளை அது மணியாக குறையும். பஞ்சாங்க கணிதம் மிகுந்த கணக்கீடுகளை கொண்டது. அதுபற்றி நாம் இங்கு விளக்க இயலாது. நமக்கு தேவை சூரிய உதய நேரம் அவ்வளவே.

உதய லக்னம் வைத்துதான் ஜென்ம லக்னம் குறிக்கப்படுகிறது. அதாவது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் சூரிய உதய லக்ன சேஷம் என குறிப்பிட்டு இருப்பார்கள். அதில் இருந்து நாம் பிறந்த நேரம் நாழிகை வரும் வரை கூடி கொண்டே போனால் ஜன்ம லக்னம் அமைகிறது. (ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடம் – இரண்டேகால் நாழிகை என்பது ஒரு மணி நேரம் )

ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் விஜயம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். ராசி என்பது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் ஒருவர் பிறக்கும்போது விஜயம் செய்து கொண்டு இருந்தாரோ அதை வைத்து ஜோதிடத்தில் ராசியை குறிக்கிறார்கள்.

விதியால் வெல்ல முடியாவிட்டாலும் மதியால் வெல்ல முயற்சிக்கலாம் – என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது லக்னம் என்ற விதியால் வெல்ல முடியாவிட்டாலும் மதி என்ற சந்திரன் கொண்டு ஒரு காரியத்தை வெற்றிபெற முயற்சிக்கலாம். விளக்கமாக பார்த்தால் ஒருவருடைய பிறந்த ஜாதகம் மோசமான பலன்களை காண்பித்தாலும் அன்றைய காரியத்தின் பலனை சந்திரன் கோள்சாரத்தில் (அதாவது இன்றைய தேதியில் கிரகங்கள் பயனித்துவரும் நிலைகளை வைத்து – கோள்சாரத்தை ) வெற்றி வாய்ப்புகளை தேட முயற்சிப்பது.

லக்னம் என்ற இடத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால் இதை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. இதை உங்கள் ஜாதக முகவரி என்று கூட சொல்லலாம். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒரு மனிதரின் ஒவ்வொரு துறை வாழ்கையை தீர்மானிக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் எதாவது ஒரு ராசி கட்டத்திற்குள் “ல” என்று எழுதி இருப்பார்கள். அதுவே உங்கள் லக்னமாகும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com