தனுசு

தனுசு லக்ன நேயர்களுக்கு,

 â™

தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் லக்னத்திற்கு 5 ம் இடத்தில் குருவும் 6 ம் இடத்தில் கேதுவும் 10 ம் இடத்தில் சனியும் 12 ம் இடத்தில் ராகுவும் இருப்பார்.இதுவரை எதிர்பார்த்த நற்பலன்கள் கூடும் .மேலும் எதிர்பாராத நற்பலன்களும் ஏற்படும் .எடுத்த காரியங்கள் கை கூடும் .இதுவரை வராத பணம் எல்லாம் வந்து சேரும் .பேச்சின் மூலமாக எதிர்பாராத தனவரவு ஏற்படும் .அதே சமயம் பேச்சு உண்மை கலந்ததாக இருக்குமாறு நடந்து கொள்ளல் வேண்டும் .இல்லையேல் அசிங்கம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .



ஆடை,ஆபரணச் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும் .ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் படிப்பில் சற்று கவனம் தேவை .எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு சற்று போராட்டத்திற்குப் பின் நினைத்த காரியங்கள் கைகூடும் .பேச்சில் சாமார்த்தியம் கூடும் .பேச்சின் மூலம் வீடு,மனை,வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு  ஏற்படும் .ஒரு சிலருக்கு கடன் வாங்கி வீடு,மனை,வண்டி வாகனங்கள் வாங்க யோகம் ஏற்படும் .ஒரு சிலருக்கு முன்னோர்களின் சொத்து மூலமாகவோ கணவன் அல்லது மனைவி மூலமாகவோ பொருள் வரவும் அதன் மூலம் விட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் .

உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நற்பலன்கள் ஏற்படும் .அவர்களுக்கு இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .உடன் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு அமையும் .அடிக்கடி பிரயாணம் செய்ய உங்களுக்குச் சந்தர்ப்பம் அமையும் .அதனால் உங்களுக்கு நன்மை ஏற்படும் .ஒரு சிலருக்கு இடமாற்றம்,மனைமாற்றம் ,ஊர்மாற்றம் ஏற்படும் .பழைய பொருட்களை விற்று புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும்.

கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .எதிர்பார்த்த கல்வி பயிலவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் .ஒரு சிலருக்கு உயர் கல்வி பயிலுவும் அதன் காரணமாக வெளியூர்,வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும் .உற்பத்தி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைத்து ஆதாயம் அடைவர் .உடல் ஆரோக்யத்தில் மிக அதைக் கவனம் செலுத்துதல் வேண்டும் .தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும் .நெருங்கிய உறவினர்களால் பிரச்சனை அல்லது அவர்களை இழக்க வேண்டிய  பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .

கலைத்துறையில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .விளையாட்டுத் துறையில் பெயர் புகழ் பெற்று விளங்க வாய்ப்பு அமையும் .அரசியலில் இருப்பவர்கள் பெயரும் புகழும் அந்தஸ்த்தும் பெறுவர்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சையும் பரிகாரமும் செய்ய வாய்ப்பு கிட்டும் .ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டாலும் அதனால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அமையும் .குழந்தைகளால் ஒரு சிலர் ஆதாயம் அடைவர் .குழந்தைகளின் அன்பும் ஆதரவும் .ஒரு சிலருக்கு கிட்டும் .இதுவரை வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .காதல் விஷயங்கள் எதிர்பார்த்த திருப்தி தரும் .ஒரு சிலருக்கு காதல் நல்ல படியாக முடிந்து திருமணத்தில் முடியும் .ஒரு சிலருக்கு காதலால் பிரச்சனை அசிங்கம் அவமானம்ப் பட நேரிடும் .இதுவரை திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் .கணவன் மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும் .அடிக்கடி உல்லாசப் பயணம் செல்ல அல்லது வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு அமையும் .இதுவரை விசா கிடைக்காதவர்களுக்கு விசா கிடைக்கும் மேலும் குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும்.

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் .வேலையில் ஊதிய உயர்வும்  உத்யோக உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் .ஒரு சிலர் அடிக்கடி கம்பெனி மாறி கொண்டே இருப்பீர்கள் .சிலர் வேலையில் அதிருப்தியுடன் வேலை செய்ய வேண்டியது வரும். உடன் பணிபுரிபவர்களால் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் .ஒரு சிலருக்கு உயர் கல்வி மூலம் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகமான நேரமும் வரும் .பங்குசந்தையில் முதலிடு செய்பவர்கள் ஓரளவு நல்ல லாபம்  ஈட்டுவர்.பெரிய அளவில் முதலிடு செய்யாமல் பரவலாக முதலிடு செய்வது பாதுகாப்பானதாகும்.

சுய தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் புரிபவர்கள் ஓரளவு கவனமுடன் தொழில் செய்வது நல்லது .விவசாயம் ,விவசாயம் சார்ந்த காய்கறி ,பழம்,பூ,வியாபாரம் மற்றும் நெல்,கோதுமை ,தான்ய உற்பத்தி செய்பவர்கள் லாபம் அடைவர் .போக்குவரத்து ,தகவல் தொடர்பு .ஐ.டி துறையில் இருப்பவர்கள் .கலைத்துறையில் இருப்பவர்கள் .கோழி ,ஆடு,மாடு,மீன்பிடித் தொழில் செய்பவர்கள் சிறு மற்றும் குறுந் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் .

மருத்துவர்கள் ,பொறியாளர்கள் ,விஞ்ஞானிகள் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .போலீஸ் ,இராணுவம் ,பாதுகாப்புத் துறையில் இருப்பவர்கள் .கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர்.

மருத்துவம்,இராசயணம் ,விஞ்ஞானம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் ,தீப்பொட்டி,வெடிமருந்து தொழில் புரிபவர்கள் சற்று கவனம் தேவை .ஆடை,ஆபரணத் தொழில் அச்சுத் தொழில் ,ஓட்டல்,ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .கண்,காது,மூக்கு ,முதுகெலும்பு ,அடிவயிறு ,கால்பாதங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும் .அடிக்கடி வைத்தியச் செலவுகள் ஏற்படும் .எனவே உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மறுத்துரை அணுகவும் . 

எம்பெருமான் கார்த்திகேயனை வணங்கி வருவதன் மூலமும் சதாசிவன் வணங்கி வருவதன் மூலமும் கெடுபலன்கள் குறைந்து நினைத்தது நடந்தேறும் .

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com