விருச்சிகம்

விருச்சிக லக்ன நேயர்களுக்கு,

 â™  விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் லக்னத்திலியே ராகு அமர்ந்து இருக்க 6 ம் இடத்தில் குருவும் 7 ம் இடத்தில் கேதுவும் 11 ம் இடத்தில் நவம்பர் மாதம் வரை சனியும் அதன் பின் 12 ம் இடத்தில் அவர் சஞ்சாரம் செய்வதும் எதிர்பார்த்த நற்பலன்களை ஓரளவு தருவதில் தயங்க மாட்டார்கள் .இதுவரை எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் நமக்குச் சாதகமாக வந்து சேரும் .மேலும் எதிர்பாராத தனவரவையும் பொருள் வரவையும் அளிப்பார்கள் .அதே சமயம் எதிர்பாராத செலவையும் உண்டு பண்ணும் .



கேட்ட இடத்தில் பணம் கிடைக்கச் செய்யும் ஆபரணச் சேர்க்கை ஏற்படும் .குடும்பத்தில் ஒரு புதுவரவு வர வாய்ப்பு அமையும் .பேச்சால் சம்பாத்தியம் கூடும் .இதுவரை வராமல் நிலுவையில் இருந்த பணம் எல்லாம் வந்து சேரும் .ஆடைகள் ,நிலம் ,வீடு,மனை,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் .கஷ்டப்பட்டு உழைத்தச் சேர்த்த பணம் எல்லாம் நல்ல வழியில் செலவு செய்யவும் நல்ல வழியில் முதலிடு செய்யவும் வாய்ப்பு அமையும் .

உடல் பிறந்த சகோதர சகோதிரிகளால் நற்பலன்கள் கூடும் .ஒரு சிலருக்கு உடன் பிறந்தவர்களின் சுபகாரியங்களுக்காகச் செலவு செய்ய வாய்ப்பு அமையும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் .புதிய செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும் .பழைய பொருட்களை விற்று புதிய பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமாகச் சென்றுவருதல் வேண்டும் .மேலும் தபால் மூலம் படிக்கவும் அல்லது பகுதிநேரமாகப் படிக்கவோ அல்லது ஆன்லைன் மூலம் படிக்க சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .வெளியூர் ,வெளிமாநிலங்கள் ,வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும் .புதிய நண்பர்கள் அறிமுகமும் ஆதாயமும் கிட்டும் .நெருங்கிய உறவினர்களால் ஆதரவும் அதே சமயம் நெருங்கிய உறவினர்களின் இழப்பும் ஏற்படும் .

தொழிற்கல்வி பயில்பவர்கள் உயர்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றும் எதிர்பார்த்த கல்லூரியும் கிடைக்கப் பெறுவர்.மேலும் அடிக்கடி பரிட்சை எழுதியும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியும் அடைவர் .ஒரு சிலர் போட்டித்தேர்வு குறுக்கெழுத்துப் போட்டி இவற்றில் கலந்து கொண்டு வெற்றியும் பரிசும் பெறுவர் .பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர் ,தாயாரால் எதிர்பாராத நன்மையும் அன்பையும் ஒரு சேரப் பெறுவர் .முன்னோர்கள் சொத்து அல்லது கணவன் மனைவி மூலம் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறும்.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .அதே சமயம் ஒரு சிலர் கடுமையான போராட்டத்தையும் அசிங்கம் அவமானத்தையும் அடைவர்.ஒரு சிலருக்கு காதலில் வெற்றி கிட்டி அது திருமணத்தில் முடியும் .இதுவரை திருமணம் தள்ளிப் போய் அல்லது தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும் .மேலும் பங்குசந்தையில் முதலிடு செய்பவர்கள் எதிர்பார்த்த நற்பலனை அடைவார்கள் .குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் .குழந்தைகளால் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .குழந்தைகளால் நற்பலன்கள் அவர்களால் தனவரவு பொருள்வரவு ஒரு சிலருக்கு அமையும் .ஒரு சிலருக்கு விசா கிரின்கார்டு கிடைக்க வாய்ப்பும் உல்லாசமாக டூர் செல்லவும் அதனால் மகிழ்ச்சியும் அமையும்.

புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும் .மேலும் இதுவரை வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்க .ஒரு சிலர் வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகமும் புதிய வேலை கிடைக்கவும் புதிய கம்பெனி மாறவும் சந்தர்ப்பம் அமையும் .ஒரு சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த திருப்தியிராது.மேலும் அடிக்கடி விடுப்பு எடுத்தல் கூடாது .எப்பொழுதும் மாற்றத்தை மட்டுமே விரும்புவதால் வேலையில் கவனம் செலுத்தவும் .

அரசியலில் இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்ட நேரிடும் .எனவே கவனம் தேவை .மேலும் சமுக ஆர்வலர்கள் ,தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் சங்கம் போன்ற செயல்களில் இருப்பவர்கள் பெயர் புகழ் பெறுவர்.

சின்னத்திரை ,பெரியத்திரை இருப்பவர்கள் இசைக்கலைஞர்கள் ,நடிகர்கள் ,டைரக்டர்கள் இவர்கள் பெயர் புகழ் பெறுவர் .மருத்துவர்கள் ,பொறியாளர்கள் ,ஐ.டி துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .நிதி,நீதி ,வாங்கி மற்றும் அரசு ஊழியர்கள் வேலையில் கவனம் தேவை .

காவல்துறை ,இராணுவத் துறையில்  இருப்பவர்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி அணு ஆராய்ச்சி செய்பவர்கள் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ கருவிகள் செய்பவர்கள் அதை விற்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .மேலும் வெடிமருந்து ,வெடிபொருட்கள் ,வேளாண் இராசயணம் பொருட்களை உற்பத்தி செய்வோர் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் .

கல்வித்துறையில் அறநிலையத்துறையில் இருப்பவர்கள் போக்குவரத்து ,மின்சாரம் வாரியத்தில் பணிபுரிபவர்கள் ,உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் பெயர் புகழ் பெறுவர் .எதிர்பார்த்த நன்மைகளை அடைவர் .மத குருமார்கள் ,சாமியார்கள் ,ஜோதிடர்கள் ,தெய்வீக பணியில் இருப்பவர்கள் நற்பலன் அடைவர்.

எல்லாம் வல்ல பரம் பொருள் ஸ்ரீ மகா கணபதியை வணங்குவதன் மூலமும் அன்னை அபிராமியை வணங்குவதன் மூலமும் நற்பலன்கள் அதிகரித்து நம் விருப்பம் ஆசைகள் பூர்த்தியாகும் .

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com