துலாம்

துலா லக்ன நேயர்களுக்கு,


 ♎ உங்கள் துலா லக்னத்திற்கு 2 ம் இடத்தில் ராகுவும் 7 ம் இடத்தில் கேதுவும் 12 ம் இடத்தில் சனியும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பார்த்த நற்பலகளும் எதிர்பாராத நற்பலன்களும் கலந்து காணப்படும் .


உங்கள் செயல்,சொல் ,நடத்தை அனைத்திலும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் .தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதோ மற்றவர்களுக்காக ஜாமீன் போன்ற காரியங்களில் ஈடுபடுவதோ கூடாது .எப்பொழுதும் எதிலும் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும் .யாரையும் நம்பி எதிலும் இறங்கவோ முடிவு கட்டவோ கூடாது .

பழைய பொருட்களை விற்று புதிய பொருள் வாங்க வாய்ப்பு ஏற்படும் .வீடு,மனை இவற்றை பராமத்து செய்ய அல்லது காம்பவுண்டு சுவர் எடுக்க செலவு செய்ய வாய்ப்பு அமையுமானால் அதை ஒத்திப் போடாமல் உடனே செய்யவும் .சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அன்பும் கிட்டும் .அதே சமயம் அவர்களால் பிரச்சனைகளும் மன உளைச்சலும் ஏற்படும் .உறவினர்களால் நன்மை ஏற்படும் .நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும் .புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் இருப்பினும் அதில் நிறையத்  தடைகள் ஏற்படும் .இடமாற்றம் ,மனைமாற்றம், ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படினும் அதிலும் நிறையத் தடைகளும் பிரச்சனைகளும் ஏற்படும் .அடிக்கடி ஆலைய நேரிடும் .ஆனால் லாபமும் நஷ்டமும் கலந்தே அமையும் .2 சென்ஸ் பத்திரங்கள் ,டாகுமென்ட்கள்,இன்சூரன்ஸ் பத்திரங்கள் இவைகளை எல்லாம் கவனமாப் பாதுகாத்து வைத்துக் கொள்வோம் .இல்லையேல் தொலைந்துபோகவோ திருடுபோகவோ வாய்ப்பு அமையும் .

இடம்,மனை,வீடு ,வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் .ஒரு சிலருக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு அமைய வாய்ப்பு ஏற்படும்.தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க வாய்ப்பும் நல்ல கல்லூரி கிடைப்பதில் போராட்டமும் அமையும் .தாராரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் புரிபவர்கள் உற்பத்தி விலைக்கே விற்க வேண்டியது இருப்பதால் சற்று காலம் தாழ்த்தி விற்கும் பொழுது நல்ல லாபம் கிடைக்கும் .

காதல் விஷயங்கள் ரகசியமாகவே இருக்கும் .ஒரு சிலருக்கு காதலால் பிரச்சனைகளும் போராட்டங்களும் மனக்கசப்பும் ஏற்படும் .ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணம் முடிந்து பிரிந்து வாழ வாய்ப்பு அமையும் .கலைத்துறையில் இருப்பவர்கள் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் சனிப் பெயர்ச்சிக்குப் பின் நல்ல பெயர்,புகழ் ,வருமானம் ஏற்படும் .பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனமுடன் முதலிடு செய்தல் வேண்டும் .இல்லையேல் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும் .குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் .இதுவரை வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பம் கூடி வரும் .ஒரு சிலர் குழந்தைக்காக தொடர் மருத்தவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும் .குழந்தைகள் வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .இசை,நடனம் ,ஓவியம் போன்ற கலைகளில் ஒரு சிலருக்கு ஆர்வமும் மருத்துவ சம்பந்தமான புத்தகங்களில் படிப்பதில் ஒரு சிலருக்கு ஆர்வமும் க்ரைம் சம்பந்தப்பட்ட நாவல்கள் நூல்கள் படிக்க வாய்ப்பு அமையும் .கோவில்களுக்குத் தொடர்ந்து செல்வதில் தடை ஏற்பட்டு விலகும் .

உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை ,எலும்பு ,மஞ்ஜைகள்,அடிவயிறு போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் .கண்,காது,மூக்கு ,முதுகெலும்பு ,நரம்புச் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு விலகும் .வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் .வேலையை அல்லது கம்பெனியை மாற்ற வேண்டி வரும்.இதுவரை தடைபட்டு வந்த விசா கைக்கு வந்து சேர்ந்து ஒரு சிலர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல சந்தர்ப்பம் அமையும் .உயர் கல்வி பயில்வதில் தடை ஏற்பட்டாலும் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிப்படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படும் .நிறைய பரிட்சை எழுதவும் நேர்முகத்தேர்வுக்கு சென்று வெற்றியடையவும் வாய்ப்பு அமையும் .ஒரு சிலருக்கு வேலையில் திருப்தியிராது .

நிதி,நீதி ,வங்கி ,இன்சூரன்ஸ் துறையில் இருப்பவர்கள் அணு ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானிகளுக்கு  சுமாராகவும் சிறு தொழில் சுய தொழில் புரிபவர்களுக்கு ஓரளவு சாதகமாகவும் அமையும் .அதே சமயம் விவசாயம் ,மீன்பிடித்தொழில் இருப்பவர்கள் ,காய்கறி ,பழம்,பூ,இலை மொத்த வியாபாரிகளுக்கு சுமாராகவும் ,ஐ.டி ,போக்குரத்து துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் .

ஆடை,ஆபரணம்,தங்கம் ,வெள்ளி வியாபாரிகள் ,வெடிமருந்து ,வெடிபொருட்கள் ,தீப்பொட்டி ,இரும்பு ,எக்கு ,நிலக்கிரி ,சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் .அரசு ஊழியர்கள் குறிப்பாக போலீஸ்,இராணுவம் ,குற்றப்புலானய்வு பிரிவினர் ,மத குருமார்கள் ,ஜோதிடர்களுக்குச் சுமாராகவும் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை இராசயணம் உரத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபமும் ஏற்படும் .

ஸ்ரீ ஐயப்பனையும் அஞ்சநேயரையும் சிவனையும் வணங்கி வர கெடுபலன்கள் குறையும் .மேலும் அவரவர் குலதெய்வ வழிபாடு நடத்த எதிர்பார்த்த நற்பலன்கள் உடனே நடந்தேறும்.
 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com