கன்னி

கன்னி லக்ன நேயர்களுக்கு,

 

 â™  கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் லக்னத்திலே சனி 3 ம் இடத்தில் ராகு 8 ம் இடத்தில் குரு 9 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் தாங்கள் நினைத்த காரியம் நடக்க வாய்ப்பு அமையும் .இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் சற்று வலுவான போராட்டத்திற்கு பின் நடந்தேற வாய்ப்புகள் ஏற்படும் .ஆரம்பத்தில் சற்றே நாம் ஈடுபடும் காரியங்கள் சுணக்கம் காட்டினாலும் சனிப் பெயர்ச்சிக்குப் பின் எடுத்த காரியங்கள் ஓரளவு எதிர்பார்த்த வெற்றியடையும் லாபத்தையும் தரத் தயங்க மாட்டார் .அதிக உழைப்பு குறைந்த வருமானமும் கிடைத்தாலும் பின்னாளில் நீங்கள் எதிர்பாராத விதமாக நற்பலன்கள் அளிக்கத் தயங்க மாட்டார்கள் .



இதுவரை கஷ்டப்பட்டு உழைத்தப் பணம் எல்லாம் உருப்படியாக ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படும் காலம் மிது .மேலும் வீட்டில் நகை ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும் காலம் இது .ஒரு சிலருக்கு கல் வைத்த நகைகள் வாங்க வேண்டிய நேரமிது வாகும்.உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் .பேச்சில் சாமர்த்தியம் கூடும் .அதே சமயம் உடன் பணிபுரிபவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் கவனமாகப் பேசுதல் வேண்டும் .ஆரம்பக்கல்வி பயிலுபவர்கள் படிப்பில் நன்கு தேர்ச்சி பெறுவர்.

போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாகச் சென்று வருதல் வேண்டும் .மாடியிலிருந்து இறங்கும்பொழுதும் நடந்து செல்லும் பொழுதும் மிக அதிக கவனம் தேவை .உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நற்பலன்களும் அதே சமயம் அவர்களால் நமக்கு வேதனையும் பிரச்சனைகளும் மாறி மாறி நடந்தேறும் .நம்மைப் பற்றித் தவறான செய்துகளைத் தேவையில்லாமல் பரப்புவர் .எதிர்பார்த்த செய்திகளில் தடை ஏற்படும் வர வேண்டிய பணம் வந்து சேரும் .அதுவும் தவணை முறையில் வந்து சேரும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் கூடும் .வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயமும் அதே சமயம் பிரச்சனைகளும் ஏற்படும் .தாயாருக்கு கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .எப்பொழுதும் ஏதாவது ஒரு கலைத்துறையில் ஈடுபாடு அதிகரித்த வண்ணம் இருக்கும் .நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் .

உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கேற்ற லாபம் வரும் வரை ஸ்டாக் வைத்து விற்க லாபம் கிடைக்கும் .சொத்து ,இடம்,மனை,வீடு,வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஏற்பட்டாலும் மிகவும் கவனமாக ஆவணங்களை சரி பார்த்துப் பொருள்களை வாங்கவும் தொழிற்கல்வியில் பயிலுபவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண்ணும் எதிர்பார்த்த கல்லூரியும் கிடைக்க வாய்ப்பு அமையும் .நண்பர்களால் ஆதாயமும் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .அடிவயிறு ,கால்,தலை போன்ற உடல் பாகங்களில் பாதிப்பு ஏற்படும் .மேலும் தலைசுற்றல் ,மயக்கம்,கால் வலி ,இடுப்பு ,முட்டு வலி போன்ற வலிகளும் இதயம் ,கண் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும் .உடலில் சிறு பிரச்சனை என்றாலும் உனடியாக நல்ல மருத்துவரை அணுகவும் .

நல்ல அறிவும் ஆற்றலும் உண்டாகும் என்றாலும் பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை .கலைத்துறையில் ஈடுபாடும் அதனால் லாபமும் ஏற்படும் .சினிமா,டி.வி போன்ற துறையும் ,இயல்,இசை,நாடகம் போன்ற பாரம்பரியக் கலைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும் .அரசியலில் இருப்பவர்கள் நன்கு கவனமுடன் செயல்படுதல் வேண்டும் .பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சமுக சேவகர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் கிளப் மெம்பர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள் .

வேலையில்லாமல் இதுவரை இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும் .காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு இனிப்பாகவும் ஒரு சிலருக்கு கசப்பாகவும் அமையும் .கணவன் மனைவிக்குள் சற்று கருத்து வேறுபாடும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு விலகும் .கிடைக்கும் வேலையில் எதிர்பார்த்த திருப்திகரமாக இல்லாவிட்டாலும் பார்க்கும் வேலையை விட வேண்டாம்.ஒரு சிலர் அடிக்கடி கம்பெனி மாறி கொண்டே இருப்பார்.

வழக்கு விஷயங்கள் இழுத்துக் கொண்டே போகும் .தேவையில்லாமல் மற்றவர்களை பகைத்துக் கொள்ளல் வேண்டாம் .வேலையில் அடிக்கடி லீவு போடுதல் கூடாது .ஒரு சிலருக்கு தனியார் மற்றும் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும்.

ஆச்சாரியார்கள் ,மத குருமார்கள் ,ஜோதிடர்கள் ,வைத்தியர்கள் போன்றோர் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் நிதி,நீதி மற்றும் வங்கி பணியில் இருப்பவர்கள் ,மருத்துவர்,பொறியியல் துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும் .தகவல் தொடர்பு ,போக்குவரத்து ,விஞ்ஞானம் ,விவசாயத் துறை ,வேளாண் உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் லாபம் அடைவர் .ஐ.டி துறையில் இருப்பவர்கள் சிறு தொழில் வியாபாரிகள் ஏற்றமதி இறக்குமதி செய்பவர்கள் சாலையோர வியாபாரிகள் நன்மை அடைவர் .பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் .போலீஸ்,இராணுவம்த் துறையில் பணிபுரிபவர்கள் கவனமுடன் இருத்தல் வேண்டும் .

ஸ்ரீ அஞ்சநேயரையும் ஐயனாரையும் வணங்கி வர நற்பலன்கள் கூடும் .ஸ்ரீ மஹா லெஷ்மியை வணங்கி வர எதிர்பார்த்த நன்மைகள் அதிகரிக்கும் விருப்பம் ஆசை ,அபிலாசை பூர்த்தியாகும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com