சிம்மம் 

சிம்ம லக்ன நேயர்களுக்கு,

 ♌

உங்கள் சிம்ம லக்னத்திற்கு ராகு 4 ம் இடத்திலும் கேது 10 ம் இடத்திலும் குரு 9 ம் இடத்திலும் சனி 2 ம் இடத்திலும் சஞ்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை உண்டாக்கும் .இதுவரை நினைத்தும் எண்ணியும் முயற்சித்தும் வந்த காரியம் சிக்கிரம் கைகூடும் .தெய்வ அனுகூலம் கிட்டும் .அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.பேச்சில் சாமர்த்தியம் கூடும்.வாயால் செய்யக்கூடிய அல்லது பேசக்கூடிய அனைத்தும் எதிர்பார்த்த நற்பலன்களை நல்கும் .ஒரு சிலருக்கு ஆடை,ஆபரணம்,வீடு,மனை,வண்டி வாகனங்கள் நிறைய விட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் .அதே சமயம் தேவையில்லாமல் யாரிடமும் பேச்சுவார்த்தை கூடாது .இல்லையேல் அதிகமாகப் பொய் பேச வேண்டி வரும் .கடுமையாக உழைத்து பொருள் சேர்க்க வாய்ப்பு கிட்டும் .இதுவரை வராமல் இருந்த பணம் தவணை முறையில் வந்து சேரும் .பத்திரங்கள் லாக்கரில் வைக்கவும் ,நகைகளை வைத்து எடுக்கவும் வாய்ப்பு அமையும் .இக்காலங்களில் கவனமாக செயல்படுதல் வேண்டும் .

அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும் .எப்பொழுதும் ஏதாவது பரிட்சை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருப்பார்கள் .புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டி வரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நற்பலன்கள் ஏற்படும்.அவர்களுக்கு வேலை கிடைக்கவும் அவர்களுக்குத் திருமணம் நடக்கவும் சந்தர்ப்பம் உண்டு .தபால் மூலமாகவோ ,ஆன்லைன் மூலமாகவோ எதையாவது படிக்க வாய்ப்பு அமையும் .நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் .இல்லையேல் பிரிய வேண்டி வரும் .நேர்முகத் தேர்வில் துணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று வேலை வாய்ப்பைத் தட்டிச் செல்வீர்கள் .இருப்பினும் எப்பொழுதும் ஏதாவது ஒரு மனக்குழப்பத்திலேயே இருந்து கொண்டே இருப்பார்கள் .நீங்கள் நினைத்த முடிவை நீங்களே சமயங்களில் மாற்றுவீர்கள் .

கல்வியில் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்ணும் எதிர்பார்த்த கல்லூரியும் நன்கு அமையும் .உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .வயிறு ,கண் ,கால்,ஜனன உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் .அடிக்கடி தலைவலி ,காய்ச்சல் ,தேம்பல்,மஞ்சள் காமாலை ,தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு நிரிழிவு .டைபாய்டு ,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும் .எனவே உடலில் கட்டி போன்ற சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகவும் .பொருகளை உற்பத்தி செய்பவர்கள் ஓரளவு நல்ல லாபம் அடைவார்கள் .தாயாரால் நற்பலன்களை ஒரு சிலர் அனுபவிப்பர் .சுய தொழில் செய்பவர்களுக்குத் தொழில் விட்டு விட்டு நடக்கும் .அதற்காகத் தொழில் இல்லாமல் போகாது .தொழிலை விட்டுப் போகமுடியாமலும் தொழிலை தொடர்து நடத்த முடியாமலும் சில சூழ்நிலைகள் ஏற்படும்.

குழந்தைகளால் நன்மையைடைவீர்கள் .இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் .இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சையும் தகுந்த பரிகாரமும் செய்ய புத்திர பாக்கியத்திற்கு வழி ஏற்படும் . வேடிக்கை வினோதங்களில் மனம் ஈடுபடும் .எப்பொழுதும் சினிமா,டி.வி ,கேளிக்கை ,டூர் போன்றவற்றில் மனம் ஈடுபாடு அதிகரிக்கும் .ஒரு சிலர் வேலையை விட வேண்டியது வரும் .எனவே அவசரப்பட்டு வேலையை விட வேண்டியது இல்லை .ஏனெனில் அடுத்த வேலை கிடைக்க சிறிது காலம் ஆகும் .பார்க்கும் வேலையை அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும் .வேலையின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .பார்க்கும் வேலையில் அடிக்கடி லீவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .

காதல் விஷயங்களில் பிரச்சனைகள் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே அதில் கவனம் தேவை .பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் நஷ்டப்பட்டுப் பின் லாபம் அடைய வாய்ப்பு உண்டு.அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்.இது பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் .நலச் சங்கம் ,கம்பெனி,கமிட்டியில் இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது ஆகும் .ஒரு சிலருக்கு குழந்தைகளால் அசிங்கமும் அவமானமும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் .

வங்கி ,இன்சூரன்ஸ் ,மருத்துவர் ,பொறியியல் துறையில் இருப்பவர்கள் மற்றும் ஐ.டி துறையில் இருப்பவர்கள் .வேளாண் விஞ்ஞானிகள் ,ஆராய்ச்சியாளர்கள் ஏற்றம் பெறுவர்.கமிஷன் ,ஏஜென்ஸி,புரோக்கர் தொழில் புரிபவர்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் சிறுதொழில் ,குருந்தொழில் புரிபவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .சிறு மற்றும் நடைபாதை வியாபாரிகள் ,கார் மற்றும் எலெக்ட்ரிகல் ,எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .மேலும் இராசயணம் ,இரும்பு ,எக்கு ,பெட்ரோல் ,நிலக்கரி போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .

திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி வர நற்பலன் கூடும் .வேளாங்கண்ணி சென்று மாதாவை வணங்கி வர நற்பலன்கள் கூடும் .

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com