கடகம் 

கடக லக்ன நேயர்களுக்கு,

 

 ♋ லக்னத்திற்கு 5 ல் ராகுவும் 10 ல் குருவும் 3 ம் இடத்தில் சனியும் 11 ம் இடத்தில் கேதுவும் இருப்பதால் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்பட வாய்ப்பு அமையும் .இதுவரை தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக நிறைவேறும் .குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வரவு மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற சந்தர்ப்பம் கூடும் .எடுத்த காரியங்களில் வெற்றியும் புகழும் கூடும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்கச் செய்யும் .



வீட்டில் ஆடை,ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் .பேச்சில் சாமர்த்தியம் கூடும் .பேசுவதில் எழுதுவதில் ஓவியம் வரைவதில் ஆர்வமும் திறமையும் கூடும் .ஆரம்பக்கல்வி பயில்வதில் ஆர்வம் அதிகரிக்கும் .எப்பொழுதும் ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றிக்கான மனம் ஈடுபடும் .பேச்சில் சாமர்த்தியம் கூடும் .பேச்சால் வருமானம் சம்பாத்தியம் கூடும்.

இடமாற்றம் ,ஊர்மாற்றம் ,வேலைமாற்றம் ஏற்படும் .சகோதர சகோதிரிகளால் நற்பலன் கூடும் .புதிய நற்பலன்கள் கூடும் .புதிய நட்பு வட்டாரம் விரிவடையும் .இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் உனடியாக நடைபெறும் .புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வமும் அதிகரிக்கும் .நேர்முகத் தேர்வு போட்டித் தேர்வு இவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்புண்டு .மேலும் உதவிப்பணம் ஒரு சிலருக்கு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் .அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும் .பிரயாணத்தால் ஓரளவுக்கு நற்பலன் ஏற்படும்.

வீடு,மனை,வேண்டி வாகனங்கள் ,விட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் .நல்ல கல்வி அமையும் .எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவும் யோகம் ஏறபடும் .பொருட்கள் உற்பத்தி செய்து வியாபாரம் செய்பவர்கள் நல்ல விற்பனை அதன் மூலம் நல்ல வருமானம் ஏற்படும் .தாயாரால் ஒரு சிலருக்கு நன்மை ஏற்படும் .வேலை விட்டு விட்டு நடக்கும் .ஆனால் வேலையில்லாமல் போகாது .

வாணிகம் செய்பவர்கள் பங்குசந்தையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த அளவு நன்மை பெறுவர்.சினிமா,சின்னத் திரையில் இருப்பவர்கள் புகழ் பெறுவர் .கடல் கடந்து செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .ஒரு சிலருக்கு சமுகத்தில் பெரிய அளவில் புகழ் கீர்த்தி அமைய வாய்ப்பு ஏற்படும் .அரசியலில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நற்பலன்களையும் பெயரையும் புகழையும் அடைவர் .இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு அமையும் .ஒரு சிலர் மருத்துவ பரிசோதனையும் அதன் தொடர்ச்சியாக தொடர் சிகிச்சை எடுக்க சந்தர்ப்பம் அமையும் .குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும்.இதுவரை தள்ளிப்போன விசா உடனடியாக கிடைக்க வாய்ப்பு கிட்டும் .காதல் விஷயங்களில் பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும் .ஒரு சிலருக்கு திருமணம் நல்ல படியாக நடந்தேறும் .

உடலில் வயிற்று வலி ,வீக்கம் ,வாய்வுத் தொல்லை ,பித்தம் ,வெட்டுக்காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் .எனவே உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .புதிய வேலை தேடுவோர்க்கும் அடிக்கடி கம்பெனி மாருவோர்க்கும் எதிர்பார்த்த திருப்தியிராது.வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும் .கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் .அதை வைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்க வாய்ப்பு அமையும் .நேரத்திற்கு சாப்பிட்டுவிடவும் இல்லையேல் வயிற்று உபாதைகள் .நிரழிவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் .போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாகச் சென்று வரவும் .தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுவதோ அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும் .கணவன் ,மனைவி உறவு சுமுகமாக இருக்கும் .நண்பர்களால் ஆதாயமும் அவர்களால் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு .

ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் சுய தொழில் புரிபவர்கள் சிறு தொழில் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் எற்றமடைவர் .மருத்துவர் ,பொறியாளர்கள் ,ஐ.டி துறையில் பணிபுரிபவர்கள் ,விஞ்ஞானிகள் மற்றும் போக்குவரத்து தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர்.

கமிஷன் ,ஏஜென்சி ,புரோக்கர்ஸ் மற்றும் கட்டுமானத் தொழில் புரிபவர் ,சிமிண்ட்,செங்கல் உற்பத்தியாளர்கள் ,தீப்பெட்டி ,வெடிமருந்து தாயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவர் .இரும்பு ,எக்கு நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பழம்,காய்கறிகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் ஏற்றம் பெறுவர் .மீன்பிடித் தொழில் புரிபவர்கள் தெருவோரம் சிறு வியாபாரம் செய்பவர்கள் .ஆடை,ஆபரணத் தொழில் புரிபவர்கள் .பிளாஸ்டிக் ,எவர்சில்வர் தொழில் புரிபவர்கள் நன்மை அடைவர்.மேலும் சமூக சேகவர்கள்,லயன்ஸ் கிளப் உறுப்பினகள் ,ஓட்டல் முதலாளிகள் லாபம் பெறுவர் .

துர்க்கையை வணங்கி வர நற்பலன் மிகும் மேலும் ஸ்ரீ மஹா கணபதியை வணங்கி வர வாழ்வு வளம் பெறும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com