மிதுனம் 

மிதுன லக்ன நேயர்களுக்கு,

 ♊ உங்கள் லக்னத்திற்கு 6 ம் இடத்தில் ராகுவும் ,கேது 12 ம் இடத்திலும் சனியானவர் 4 ம் இடத்திலும் சஞ்சர்ப்பதால் வாழ்க்கையில் ஓரளவு முன்னேற்றம் அமையும் .

6 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் எதிலும் வெற்றியும் எதிர்பாராத தனவரவையும் பொருள் வரவையும் காட்டும்.இதுவரை வாரமல் இருந்த பணங்கள் பொருள்கள் வந்து சேரும் .கணவன் அல்லது மனைவி அல்லது முன்னோர் மூலமாக எதிர்பாராத சொத்துக்கள் வந்து சேரும் .உடன் பிறந்தவர்களாலும் ,உறிவினர்களாலும் எதிர்பாராத லாபமும் அதே சமயம் அவர்களுக்காக சுப விரையமும் செய்ய வேண்டி வரும் .அடிக்கடி இடமாற்றம் ,ஊர்மாற்றம் ஏற்படும் .ஆடை ,ஆபரணச் சேர்க்கை ஏற்படும் .

எழுதுவதில் கலைத்துறையில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .புதிய விஷயங்களைக் கற்பதிலும் புதிய நபர்களை எதிர்பாராத விதமாக சந்திப்பால் நம்மையும் ஏற்படும்.உழைப்புக்கேற்ற விரையமும் ஏற்படும் .எதிலாவது முதலிடு செய்து கொண்டே இருக்க வாய்ப்பு அமையும் .மேலும் அதனால் லாபமும் ஒரு சிலருக்கு கிட்டும் .உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் நன்மையும் ஆதாயமும் ஏற்படும் .இதுகாறும் அவர்களுக்குத் தள்ளிப்போன சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் .வீடுமாற்றம் இடமாற்றம் ஊர்மாற்றம் அமைய சந்தர்ப்பம் அமையும் .எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டும் ஆராய்ச்சி செய்து கொண்டும் இருப்பார்.

இடம்,மனை,வீடு,வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு அமையும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .நல்ல மதிப்பெண்கள் பெறவும் உதவிப பணம் பெறவும் அல்லது கல்வி கடன் பெறவும் வாய்ப்பு அமையும் .எதிர்ப்பார்த்த படிப்பு கல்லூரி அமைய சந்தர்ப்பம் கூடும் .தாயாரால் ஒரு சிலருக்கு நம்மையும் ஒரு சிலருக்கு தாயாரை விட்டுப் பிரியவும் நேரிடும் .உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஓரளவு நல்ல லாபம் பெறுவர் .உற்பத்தியாகும் பொருள்களை நல்ல விலைக்கு விற்க வாய்ப்பு கிட்டும்.

கலைத்துறையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் ,நல்ல வருமானம் பெறுவர் .புதிய கலைகளைக் கற்பதில் பெருமையடைவர் .குழந்தைகளுக்காக நிறையச் செலவு செய்வர் .குழந்தைகளுக்காக இதுகாறும் தள்ளிப்போன சுப காரியங்கள் விரைவில் நடந்தேற வாய்ப்பு உண்டு.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு.காதல் விஷயங்கள் இரகசியமாக இருக்கும் .ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் .சிலருக்கு திருமணம் முடிந்து வேலையின் நிமித்தமாக பிரிய நேரிடும் .

புதிய புதிய வேலை வாய்ப்புகளை மனம் நாடும் .வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் .அடிக்கடி கம்பெனி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .பார்க்கும் வேலையில் விட்டுவிடுதல் வேண்டாம் .ஒரு சிலருக்கு புதிய வேலையில் சேர்ந்தவுடன் சிக்கல் ஏற்பட வாய்ப்பு அமையும் .கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .கடன் வாங்கி பொருள் வாங்க இடம்,மனை,வீடு,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் .உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை ,அடிவயிறு ,முதுகு ,நரம்பு ,நீரழிவு போன்ற நோய்களால் மிகவும் அவதிப்பட நேரிடும் .ஒரு சிலருக்கு வெளியில் சொல்ல முடியாத நோய்களும் பிரச்சனைகளும் இருந்து கொண்டே இருக்கும் .சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் சரியான தூக்கமின்மையாலும் துன்பப்படுவார்கள் .ஒரு சிலருக்கு கெட்ட கனவுகள் வந்து போகும் .தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலியிடாமல் ஒதுங்கி நிற்ப்பது நல்லது .உடன் பணிபுரிபவர்களிடமும் உயரதிகாரிகளிடமும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளவும் .யாரிடமும் உண்மையை உரைத்தல் கூடாது .இரகசியம் காத்தல் வேண்டும் .குடும்ப விஷயங்களையும் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்ளல் கூடாது .தந்தையின் உடல் நலத்தில் மிக அதிக கவனமுடன் இருத்தல் வேண்டும் .வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும்.ஒரு சிலருக்கு விசா கிடைக்க சந்தர்ப்பம் கூடும் .ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் மிக அதிக கவனமுடன் தொழிலில் முதலிடு செய்தல் வேண்டும் .ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .

நிதி மற்றும் சட்டத்துறையில் இருப்பவர்கள் போலீஸ்,இராணுவம் ,உளவுப்பிரிவில் இருப்பவர்கள் துப்பறியும் தொழில் புரிபவர்கள் லாபம் பெறுவர் .அரசியல்வாதிகள் ஏற்றமும்  கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாராகவும் இருக்கும் .கமிஷன் ,ஏஜென்டு,புரோக்கர் தொழில் புரிபவர்கள் ,டிராவல்ஸ் போக்குவரத்து சுய தொழில் புரிபவர்கள் ,ஆடை,ஆபரணத் தொழில் புரிபவர்கள் லாபம் அடைவர்.

இராசாயனம் ,நிலக்கரி,சுரங்கத் தொழில் புரிபவர்கள் .கடைநிலை ஊழியர்கள் ,விஞ்ஞானிகள் ,ஐ.டி துறையில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர்.கட்டுமானத் தொழில் ரியல் எஸ்டேட் ,ரகசியத் தொழில் புரிபவர்கள் மிகவும் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும் .விவசாயம் சார்ந்த தொழில்கள் ,காய்கறி -பழம் ,பூ வியாபாரிகள் ஏற்றம் பெறுவர் .ஜெயிலில் பணிபுரிபவர்கள் மற்றும் சிமிண்ட் இரும்பு ஏக்குத் துறையில் இருப்பவர்கள் .தீப்பொட்டி ,வெடிமருந்து ,வெடி பொருட்கள் உற்பத்தித்  துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது ஆகும் .

ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்குவதன் மூலமும் ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலமும் கெடுபலன் குறைந்து நற்பலன்கள் கூடும் .

 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com