ரிஷபம்

ரிஷப லக்ன நேயர்களுக்கு,

 ♉ உங்கள் லக்னத்திலியே கேது பகவானும் 7 ம் இடத்தில் ராகு பகவானும் 12 ம் இடத்தில் குரு பகவானும் 5 ம் இடத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்த காரியம் கைகூடும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள் .


தன்னிச்சையாக எதிலும் முடிவெடுப்பதில் சற்று குழப்பத்துடன் இருப்பீர்கள் .மற்றிவர்களின் ஆலோசனைகளை அடிக்கடி கேட்பீர்கள் .பேச்சில் கவனமுடன் இருத்தல் வேண்டும் .எப்பொழுதும் நிதானமுடன் பேசுவது நல்லது .உயர் அதிகாரிகளிடமும் மற்றும் நண்பர்களிடமும் கவனமாகப் பேசுதல் வேண்டும் .ஆடை ,ஆபரணப் பொருள் சேர்க்கை ஏற்படும் .படிப்பில் கவனம் தேவை .இல்லையேல் தடை ஏற்பட்டு கல்வி தொடரும் .உழைப்புக்கேற்ற ஊதியம் ஓரளவு தான் கிட்டும் . ஒரு சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும் .வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் பிரிய வாய்ப்பு ஏற்படும் .



எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு வந்து சேரும் .எப்பொழுதும் ஏதோ சிந்தனையில் இருந்து கொண்டே இருப்பீர்கள் .சதா படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க வாய்ப்பு அமையும் .வேண்டிய இடமாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும் .தாயாரை விட்டுப் பிரிய நேரிடும் .ஒரு சிலர் தாயாருக்காக நிறையச் செலவு செய்ய வேண்டி வரும் .எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக இராது .புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் உறவினர்களால் நன்மையும் உடன்பிறப்புகளுக்கு சுப காரியம் நடக்க வாய்ப்பு அமையும்.

இடமாற்றம் ,மனை மாற்றம்,ஊர் மாற்றம் ஏற்பட சந்தர்ப்பம் அமையும் .ஒரு சிலர் தங்களது பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க வைப்பு அமையும் .அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும் அரசாங்கத்தால் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பு அமையும் .உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .உடலில் காய்ச்சல் ,டைபாய்டு ,தேம்பல் ,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் .உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை ,மார்பு பகுதிகளில் சளித்தொல்லையில்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும் .கல்வியில் மிக அதிக கவனம் தேவை .ஒரு  சிலருக்கு கல்வியில் தடையும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்காமலும் முற்றிலும் மாறுபட்ட இடத்தில் படிக்க வசிக்க வாய்ப்பு ஏற்படும் .தாயாருக்காக நிறையச் செலவுகள் ஏற்படும் .இடம்,மனை,வீடு ,வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .

அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பும் பயணத்தால் நன்மையும் அதே சமயம் ஒரு சில பிரச்சனைகளும் ஏற்படும் .அடிக்கடி கம்பெனி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .வேலை கிடைத்தாலும் அதில் திருப்தியிராது .ஒரு சிலருக்கு வேலையில் பிரச்சினையும் சக ஊழியர்களால் மேலதிகாரிகளால் பிரச்சனையும் ஏற்படும் . காதல் விஷயங்கள் எதிர்பார்த்த அளவு மகிழ்ச்சிகரமாக அமையாது .ஒரு சிலருக்கு காதல் கசந்து அதனால் மன வேதனை அடைய வாய்ப்பு அமையும் .பங்கு சநதையில் முதலிடு செய்பவர்கள் கவனமாக முதலிடு செய்யவும் .ஒரு சிலருக்கு எதிர்பாராத லாபத்தையும் தரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் .ஒரு சிலர் மருத்துவ ரீதியாக முயற்சி செய்து பார்க்க வாய்ப்பு அமையும் .உல்லாசமாக டூர் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .வேறு வேலைக்கு மாறுவதற்கு முன் நன்கு யோசனை செய்யவும் .அடிக்கடி விடுமுறை எடுத்தல் கூடாது .வழக்குகள் இழுத்துக்கொண்டே போகும் .முடியும் தருவாயில் இருப்பது கூட சரியாக வராது .சுய தொழில் தொடங்கினால் லாபம் கிடைப்பது போல் தோன்றினாலும் லாபம் கிடைக்காது .ஏற்றுமதி ,இறக்குமதி தொழிலில் மிக அதிக கவனம் தேவை .

அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும் அதை தவிர்க்கவும் .குழந்தைகளுக்காக நிறையச் செலவு செய்ய வேண்டி வரும் .ஒரு சிலரது குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .சிலர் வெளிநாடு வேலையை விட்டு தாய் நாடு திரும்புவர் .சகோதர சகோதரிகளிடம் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .கணவன் மனைவி உறவு சுமாராகவே இருக்கும் .ஒருவரை   விட்டு ஒருவர் வேலையில்  நிமித்தமாகவோ வேறு காரணத்தினாலோ பிரிய நேரிடும் .

அரசியலில் இருப்பவர்கள் கவனமுடன் இருத்தல் வேண்டும் .பொதுவாழ்வில் இருப்பவர்கள் சங்கம் ,யூனியன் ,கிளப் இவற்றை நடத்துபவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் .உற்பத்தி செய்த பொருட்களை விற்பதில் மிக அதிக கவனம் தேவை .ஆடை ,ஆபரணத் தொழில் புரிபவர்கள் கண்ணாடி,அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .

மருத்துவம் ,பொறியியல் ,இராசயணம் மற்றும் இரும்பு ,எக்குத் தொழில் புரிபவர்கள் நன்மையடைவர் ,கல்வி சார்ந்த துறையில் இருப்பவர்கள் நீதி மற்றும் நிதித் துறையில் இருப்பவர்கள் மிக அதிக கவனம் தேவை .தகவல் தொடர்பு ,ஐ.டி துறையில் இருப்பவர்கள் .விமான போக்குவரத்து இவற்றில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர்.

சிவனை வணங்கி வருவதன் மூலமும் மகான்கள் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வருவதன் மூலமும் பள்ளிவாசல் அடிக்கடி சென்று வருவதன் மூலமும் நற்பலன் கூடும் .



"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com