சனிப்பெயர்ச்சி பலன்கள்

 

 

மீன ராசி நேயர்களுக்கு

(2014 To 2017)

சமீபத்திலிருந்தாவது பரவாயில்லை, சரிக்கட்டுவதற்கும் சௌகரியங்களை சந்திப்பதற்கும் அவ்வப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகள் இடம் கொடுக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் வரையில் பட்ட சிரமங்களுக்கு அளவேயில்லை. கடந்த 5வருடங்களாகவே சனிகிரகம் உங்களுக்கு சாதகமாக இல்லை. கண்டச்சனியாக சனி கொடுத்த கஷ்டங்களைச் சந்தித்து, அதன்பின் கடந்த 2வருடங்களுக்கும் மேலாகவே அஷ்டமத்துச் சனியின் கடுமையான பிடியில் மாட்டிக் கொண்டு, கொடுமையான பல சங்கடங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு வருகிறீர்கள்.

சாயாகிரகங்களான ராகுவும் கேதுவும் கூட அலைகழிப்புகளையும் அசௌகரியங்களையுமே தீவிரபடுத்துகிறார்கள். ஆனால், கடந்த ஜூன் மாதம் குருபகவான் இடம் பெயர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்துக்கு வந்து உச்சபலத்துடன் சஞ்சரிப்பதுதான், உங்களுடைய உடல்நலம், முக்கியத்துவம், பணவருமானம், வசதி வாய்ப்புகள், சுபகாரிய சுபட்சங்களிக்கெல்லாம் அபிவிருத்திகளைக் கொடுத்து ஆறுதல்படுத்திவருகிறது.      

  வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருவம் மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க் கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

உங்களைப் பொறுத்தவரையில், 2 வருசங்களுக்கும் மேலாக உங்கள் மீன ராசிக்கு 8ம் இடமான துலாராசியில் அஷ்டமத்துச் சனியாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், அங்கிருந்து விலகி 9ம் இடனமான விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். இதனால், முதலில் உங்களுக்கு அவதியான அஷ்டமத்துச் சனியின் காலம் முடிவடைந்துவிடுகிறது.

9ம் இடத்தில் சனி நல்லதையும் கெட்டதையும் கலந்து தருவார் என்பதுதான். ஒன்றுமட்டும் சர்வ நிச்சயம். அதாவது இதுவரை சனி அஷ்டமத்துச் சனியாக இருந்து படுமோசமான பாதிப்புகளைக் கொடுத்ததைப்போல இனிமேல் கஷ்டம் கொடுக்கப் போவதில்லை. அஷ்டமத்துச் சனியைவிட 9ம் இடத்துச் சனி பரவாயில்லை. தெவலாம். சமாளிக்கலாம் என்கிற மாதிரியான திருப்பங்களைத்தான் தருவார். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

இந்த சனிப்பெயர்ச்சியோடு என்னென்ன மாதிரியான கெட்ட பலன்கள் எல்லாம் விலகிப் போய்விடுகின்றன என்பதை விவரமகவே பார்க்கலாம். உழைப்புக் கிரகமான சனி கஷ்டஸ்தானமான 8ம் இடத்திலே இதுவரை முடங்கியிருப்பதால், சிலபேருக்கு சனி கஷ்டஸ்தானமான 8ம் இடத்திலே இதுவரை முடங்கியிருப்பதால், சில பேருக்கு உழைப்பதற்கே உருப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. வேலை இல்லாத திண்டாட்டம், வேலையிலே இருந்தாலும் அல்லாட்டம், தொழிலே இல்லாமல் தத்தளிப்பு, தொழிலிலே இறங்கினாலும் தவிப்போ தவிப்பு என்றுதான் தடுமாற வேண்டியிருக்கிறது. உழைப்பு எதுவானாலும் அது உபத்திரவமாகிறது. உபயோகத்துக்கு வருவதும் தடங்கலாகிறது. தாமதமாகிறது.

இனி அஷ்டமத்திலிருந்து சனி விலகிவிடுவதால், கசக்கிப் பிழிவதை போலிருக்கும் கஷ்ட நஷ்டங்கள் கட்டாயமாக நீங்கும். 8ம் இடத்துச் சனியின் கெட்ட பார்வையில் ஒரு பார்வை இதுவரையில் ஜீவன காரிய ஸ்தானத்தின் மீது பதிந்துகொண்டிருக்கிறது. அதனா,, ஜீவனத்துக்கு ஆதாரமாக உள்ள உத்தியோகம், தொழில், வியாபாரம், கலை ஈடுபாடு இப்படியான எதிலேயுமே அபிவிருத்தி சரியாக இல்லை. தேக்கம். முடக்கம், தயக்கம், தடுமாற்றம், ஏமாற்றம் இழப்பு, அளவுக்கு அதிகமான உழைப்பு அநாவசியமான அலைக்கழிப்பு என்றுதான் இதுவரை இக்கட்டுகளும் இடைஞ்சல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இப்போழுது சனி விலகுவதோடு, ஜீவன காரிய ஸ்தானத்துகிருந்த சனியின் கெட்ட பார்வையும் விலகிவிடுகிறது. இதனால், பிழைப்புக்கு ஆதாரமான உழைப்பு எதிர்லேயுமே சங்கடங்கள் நீங்கிச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

வறுமைப்பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருந்தவர்களும்கூட, கட்டாயம் அந்த சிறுமையிலிருந்தும் சிரமங்களிலிருந்தும் விடுபடலாம். இன்னும் சொல்லபோனால் 2015 ஜூலை வரையிலும் 2016 ஆகஸ்ட் முதலாகவும் குருபகவான் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால், அமோகமான பணவரவுகள், ஆதாய அனுகூலங்கள், பொன்பொருள் சேர்க்கைகள், வீடு வாகன வசதிகள், சுபகாரிய விசேஷங்கள் என்றெல்லாமும் கைகூட நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. உங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்றால் அஷ்டமச்சனி போட்ட முட்டுக்கட்டைகள் விலகிவிடுகின்றன. திருமணத்தை நடத்தலாம்.

மேலும், இந்த சனிப்பெயர்ச்சியோடு இதுவரையில், புத்தி, பக்தி, புத்திர, பூர்வபுண்ணிய தெய்வீக ஸ்தானத்தில் பதிந்து கொண்டிருந்த சனியின் சங்கடப் பார்வையும் நீங்கிவிடுகிறது. இதனால், உங்கள் புத்தியில் இருந்த மந்தம், மறதி, தயக்கம், குழப்பம் குளறுபடி, சந்தேகம், சஞ்சலம் இவையெல்லாமும் விலகும். மனம் தெளியும். அறிவிக்கூர்மை அதிகப்படும். நல்லது கெட்டது புலப்படும். தவறான பழக்கங்கள் தப்பான அணுகுமுறைகள், முறையில்லாத நடவடிக்கைகள் ஆகியவற்றையெல்லாம் சீர்திருத்திக் கொண்டும் மாற்றிக் கொண்டும், புதிய எழுச்சியோடு சரியான வழியில் செயல்படுவீர்கள்.

தெய்வ நம்பிக்கை, பக்தி, பிரார்த்தனைகள், புண்ணிய ஸ்தலதரிசனங்கள் ஆகியவற்றில் பற்றுதலோ பிடிப்போ விட்டுப்போய் விரக்தியடைந்திருந்த நிலைமை மாறும். தெய்வீக ஆன்மீக பக்தி விஷயங்களில் நாட்டமும் ஈடுபாடும் அதிகரிக்கும். தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கே தடங்கலாக இருந்த தோஷங்கள் நீங்கும். அதிர்ஷ்டம் என்பது அறவே இல்லாதிருந்த நிலைமை மாறி நல்ல சந்தர்ப்பங்கள் தேடவும் கைகூடவும் ஆரம்பிக்கும்.

சனியின் இன்னுமொரு பார்வை இதுவரை கெடுத்துக் கொண்டிருந்த ஜீவன காரிய ஸ்தானத்தைவிட்டு விலகிவிடுகிறது. இதனாலும்தான், ஜீவனத்துக்கு ஆதாரமான வேலைகளிலும் இதர செயல்பாடுகளிலும் இருந்த சிரமங்கள், பின்னடைவுகள் விலகு. மேலும் அஷ்டச் சனி, கனரகக் கருவிகள் இரும்பு யந்திர வேலைகள், தொழில்துறை, பணியாட்கள், சுரங்க வேலை, சுத்திகரிப்புப் பணி, பொது பணித்துறை, காண்றாக்ட், புதை பொருள் இலாக, சட்டம்; நீதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆகியவற்றில் எல்லாம் கடுமையான கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்துக் கலங்க வைக்கக்கூடியவர். ஆகவே அஷ்டமச்சனி விலகுவது இவற்றிலும் நல்ல திருப்பங்களைக் காட்டும். 

மொத்ததில் 80 % நன்றாக இருக்கும் .

 

பரிகாரம் :பிரதோஷ என்று ஸ்ரீ நந்தி  பகவானை தரிசனம் செய்து வழிபடவும்.மதுரை மீனாட்சி அம்மனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட நல்லது நடக்கும் .  

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com