சனிப்பெயர்ச்சி பலன்கள்

 

தனுசு ராசி நேயர்களுக்கு (2014 To 2017)

இதுவரையில் சனிபகவானுடைய பக்கபலம் வலுவாகவே இருந்திருக்கிறது. உழைப்பை உகந்த விதமாகப் பயன்படுத்திக் கொண்டு வந்திறீர்கள். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு சனிபகவானின் சஞ்சாரம் ஆதாய அபிவிருத்திகளுக்கு அதிகப்படியாகவே ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.

சிலமாதங்களுக்கு முன் ராசி மாறிய ராகுவும் கேதுவும் பொறுப்புகளில் அலைகழிப்புகளைத் தருவது சகஜம்தான். குருபகவான் அஷ்டம ராசியில் இயங்கினாலும், உச்சபலத்துடன் தன குடும்ப ஸ்தானத்தைப் பார்வையிடுவதால் குடும்பத் தேவைகள் நிறைவேறி வருகின்றன என்கிற அளவிலும் ஆறுதல்தான்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருவம் மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க் கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

உங்களைப் பொறுத்தவரையில், இரண்டு வருடங்களுக்கும் மேலாக உங்கள் தனுசு ராசிக்குப் பதினோராமிடமான லாப ஸ்தானத்தில் துலாராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், 12ம் இடமும் விரய ஸ்தானமுமான விருச்சிகராசியில் அடியெடுத்து வைக்கிறார்.

ஒருவருடைய ஜென்ம ராசிக்குப் 12ம் இடத்தில் சனி 2 ½ வருடங்கள் சஞ்சரிக்கும்போது விரயச்சனி, அடுத்ததாக உங்கள் ஜென்ம ராசியிலேயே 2 ½ வருடங்கள் சனி சஞ்சரிக்கிறபோது ஜென்மச்சனி, அதற்கும் அடுத்ததாக ஜென்மராசிக்கு 2ம் இடத்தில் சனி 2 ½ வருடங்கள் சஞ்சரிக்கும் போது பாதச்சனி. இப்படி 7 ½ சனியின் காலம் 3பிரிவுகளாக அமைந்துள்ளது. உங்கள் ஜென்மராசிக்கு விரயஸ்தானமான 12ம் இடத்தில் இப்போழுது சனி நடமாட ஆரம்பிப்பதால், இந்த சனிப் பெயர்ச்சியிலிருந்து நீங்கள் 7 ½ சனியின் காலத்தையும், அதன் முதல் பகுதியாகிய விரயச்சனியின் காலக்கட்டத்தையும் சந்திக்கிறீர்கள்.

இப்போதைய சனிப்பெயர்ச்சியில் சனி விரய ஸ்தானத்துக்கு வந்து சஞ்சரிப்பதால், இனிமேல் பொதுவாக அதிருப்திகரமான பலன்களைத்தான் அதிகமாக சந்திக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு அதிபதியான சனி விரய ஸ்தானத்தில் இயங்குவதால், பொதுவாக உத்தியோகம், உடம்பு, உழைப்பு, கைவேலை, தொழில் துறை, வியாபாரம், கலை ஈடுபாடு என்று ஜீவனத்துக்கு ஆதாரமாக உள்ள எந்த வேலையிலேயே போதுமான ஆதாயம், அபிவிருத்தி என்றில்லாமல், அல்லல்பட வேண்டிருக்கும். அடிப்படையான கடமைகள், அவசியமான பொறுப்புகள், ஆதாரமான காரியங்கள். அன்றாடம் உள்ள வேலைகள், இப்படியான எல்லாவற்றிலுமே இழுபறியும் இக்கட்டுகளும் இடஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும்.

உங்களுடைய எண்ணங்களும் நோக்கங்களும் திட்டங்களுமே சரியான் பாதையில் செல்லாமல் அடிக்கடி திசை தவறிக்கொண்டிருக்கும். குறிப்பாக தொழில்துறை, கனரகக் கருவிகள், இரும்பு யந்திரங்கள், தொழிலாளர்களின் தேவைகள், கோரிக்கைகள், விவகாரங்கள் நீண்ட தூரப் பிரயாணங்கள், இடமாற்றங்கள், சீரமைப்பு முயற்சிகள் சம்பந்தமாகவெல்லாம் சிரமங்களும் செலவினங்களும் அதிகப்படலாம் என்பதால், கூடுமானவரையில் எச்சரிக்கையாக இருந்துகொள்வது நல்லது.

தொழில் பொறுப்புகளை கைவிடுவது, தொழில் நிலையங்களையோ சொத்து பத்துகளையோ விற்பது, கடன் விவகாரங்களால்லேயோ உடமைகள் விட்டுப் போவது, நம்பிக்கை மோசத்தால் ஏமாற்றப்படுவது, தவறான நடவடிக்கைகளுக்குப் படிப்பினையாகக் கிடைப்பது, சட்டவிரோதமான செயல்களுக்காக தண்டனையாக ஏற்பது, என்றெல்லாம் சிலருக்கு ( சிலருக்கு மட்டுமே) ஏற்படுவதும் இந்த விரயச் சனியின் காலத்தில்தான்.

சுத்திகரிப்புப் பணி, புதைபொருள் இலாக, பொதுப்பணித்துறை. சட்டமும் நீதியும் சம்பந்தப்பட்ட பொறுப்புகள் ஆகியவை சங்கடப்படுத்துமே தவுர, சாதகமாக அமைவது கடினம்தான்.

படிப்பையும், பயிற்சியையும் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் அமைப்பு, சொந்தமாக வியாபாரம் என்று அமைவதும் சுலபமாக இல்லை. பொதுவாக சனி உழைப்புக் கிரகம் தொழில் துறைகளையும் குறிப்பிடுபவர். இப்படிப்பட்டவர் விரய ஸ்தானத்தில் நடமாடுவது காரணமாகப் பொதுவாய் உழைப்பும் பிழைப்புமே சுற்றலாய் கணக்கமாய் வெட்டியாய் விரயமாய் ஆகும் என்பதும்தான் விரயச்சனியின் பலனாகும்.

எப்படிப்பட்டவர்களுக்கும் கட்டறுத்துக்கொண்ட முரட்டுக் குதிரை தறி கெட்டு ஓடுவதைப் போல, கணக்கு வழக்கு இல்லாமல், கண்மண் தெரியாமல் பறக்கும் செலவினங்களைக் கட்டுபடுத்தி இழுத்து நிறுத்திக் கொள்வது கடினமான காரியமாயிருக்கும்.

செலவோடு செலவாக குடும்ப ஸ்தானத்தில் பதியும் சனியின் பார்வை அதற்கு இடம் கொள்ள முடியுமா? எங்கே, குடும்ப ஸ்தானத்தில் பதியும் சனியின் பார்வை அதற்கு இடம் கொடுத்தால் தானே? விரயச்சனியின் 3 கெடுதலான பார்வைகளில் ஒரு பார்வையானது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தின்மீதே பதிகிறது. இதனால், பணவரவு பற்றாக்குறையாகும். தட்டுபாடுகள் அடிக்கடி நெருங்கும், வரவுகளில் தடை தாமதங்கள் இருப்பதால், அது கொடுக்கல் வாங்கல்களையும் தேக்கப்படுத்தும். குடும்ப நிர்வாகம் குளறுபடியாகும். குடும்பத்தில் குறைகளும் குதர்க்கங்களுமே ஊடுருவிக் கொண்டிருக்கும்.

குடும்ப சுபிட்சமும் சரி, குடும்பத்துச் சுபகாரிய விஷேசங்களும் சரி, தள்ளித்தான் தட்டித்தான் போய்க் கொண்டிருக்கும். பணவசதி பலமாக இருந்தாலாவது அதை வைத்துப் பலவற்றையும் சமாளிக்கலாம். செய்யலாம். வருமான பற்றாகுறையானாலோ, வருவதைவிட செலவுகள் அளவுமீறினாலோ, கடன் கண்ணிப் பிரச்சனைகள்தானே தலையெடுக்கும்.

விரயச் சனியின் கெட்ட பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால், பணவருமான வசதி வாய்ப்புகளுக்கு இப்பொழுது பாதிப்புதான். விரயச்சனியின் தீய பார்வைகளில் மற்றொரு பார்வை, பகை, ரோக, கடன் ஸ்தானத்தின் மீது பதிகிறது. கெட்டது கெட்டால் அதனால் நல்லதுதானே! இதனால் சங்கடங்களை எப்படியாவது சமாளித்துக் கொண்டு வர முடியும். சனிபகவானின் இன்னொரு பாதிப்பான பார்வை, பித்ரு பாக்கிய ஸ்தானத்தின் மீது வீசுகிறது. இதனால் தகப்பனாருக்கு அசௌகரியங்களும் அவருடைய பொறுப்புகளில் சிரமங்களும் நேரும்.

பெற்றோர்கள், உற்றார்கள், ஊரார்கள், உறவினர்கள் இவர்களுக்கிடையில் உங்களுடைய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் உயர்த்திக் கொள்வதற்கும் சனியினுடைய ஒத்துழைப்பு கிடைப்பதாக இல்லை. அத்தோடு விட்டாலாவது பரவாயில்லை. இக்கட்டு, இடைஞ்சல், தப்பு, தவறு, குற்றம், குறைகள் வீண்பழி, தர்மசங்கடம் என்றெல்லாம் உண்டாக்கி, உங்கள் பெயருக்குக் களங்கம், கரும்புள்ளி என்று ஏற்படுத்தாமலிருந்தாலே பெரிய காரியம் என்று வேண்டியதாயிருக்கும்.

மொத்ததில் 65 % நன்றாக இருக்கும் .

பரிகாரம்:

ஆஞ்சநேயருக்கு வியாழன் அல்லது ஞாயிற்று கிழமையில் 108 வெற்றிலை மாலை அணிவித்து வணங்கவும். நல்லது நடக்கும் .

  For more information, click on the View    

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com