சனிப்பெயர்ச்சி பலன்கள் 

 

 

 

 

 

 

 

 

 

கன்னி  ராசி  நேயர்களுக்கு

(2014 To 2017)

இனிமேல் நல்ல பல திருப்பங்களும் நேரும் என்பதை இனி உங்களுக்கு சொல்ல முடியும். கலக்கப்படிகிற உங்களுக்கு அவ்வப்போது கவலையிலே முழுகிவிடுகிற உங்களுக்கு சங்கடங்கள் விலக இருக்கின்றன என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வதிலும் மனத்துக்கு ஆறுதல்தான். மிகவும் சந்தோஷம் தான்.

பொதுவாக 7 ½ சனியின் காலத்தில் விரயச்சனியின் 2 ½ வருடகாலமும், ஜென்மச் சனியின் 2 ½ வருடகாலமும்தான் அதிகப்படியாகக் கஷ்டப்படுத்தும், அடுத்ததாக வரும் பாதச் சனியின் 2 ½ காலம் அவ்வளவாக சங்கடப்படுத்தாது. ஆனால், பாதச் சனியாகக் கடந்த 2 ½ வருடங்களுக்கும் மேலாக நடந்துவரும் காலத்திலும் கஷ்டங்கள் கடுமையாக இருந்திருக்கும். உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் பாதச் சனியாக சஞ்சரிப்பவருடன் மற்றொரு பாபகிரகமான ராகுவும் 1 ½ வருடங்களாக ஒன்று சேர்ந்து கொண்டதுதான் இரண்டு கெட்ட கிரகங்களிடைய அந்த மோசமான சேர்க்கைதான், பணத்திற்காகவும் குடும்பப் பிரச்சனைகளுக்காவும் உங்களைப் பாடாய்ப் படுத்தி எடுத்திருக்கிறது.

இப்படியான ஒரு காலக்கடடத்தில், ஆனானப்பட்ட சனிபகவானே ராசிமாற இருக்கிறார் என்பதும், அதிலேயும் உங்கள் கன்னிராசிக்கு மிகவும் சாதகமாக சஞ்சரிக்கப்போகிறார் என்பதும், ஆகா கடலில் கை சளைக்க நீந்திக் கரை தெரியாமல் தவிப்பவனுக்குக் கப்பலே கிட்டே வந்து கைதூக்கி ஏற்றிக் காப்பாற்றுவது மாதிரிதான்.

சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 (ஐய வருடம், மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க்கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

இனி வருகிற காலம் நல்ல காலமாகும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறும். பெரிய அளவில் மனமகிழ்ச்சி ஏற்படும்படியான இனிய சம்பவங்கள் நிகழும். வாகனங்களும் கால்நடைகளும் விருத்தியாகும் என்றெல்லாம் அனுபவத்திலேயே பார்க்கலாம். பெண்கள் விரும்பத்தக்கவனாக இருப்பான். காதல் கைகூடும். மனைவி வந்து சேர்வாள். பெண்களால் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு என்கிற அளவில்தான் பலன் அறிந்துகொள்ள வேண்டும்.

சனி 3ஆம் இடத்தில் சஞ்சரித்தால் போக சுக சௌகரியங்கள் நிலைத்திருக்கும். ஆயுள் விருத்தியாகும். வீட்டில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். எதிரிகளை வெல்ல முடியும். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். வளமும் நலமும் அதிகப்படுவதுடன் மனைவி மக்களாலும் சுக சந்தோஷங்கள் கைகூடும்.

ஜென்ம ராசிக்கு 2ஆம் இடத்தில் தான் தன குடும்ப வாக்குஸ்தானம் ஆகும். ஆகவே, பாபகிரமான சனி அங்கே இதுவரை நடமாடியதன் காரணமாகப் பணவரவு, கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப நிலவரம், பேச்சு வார்த்தைகள் ஆகிய ஸ்தான பலங்களும் குறைப்பட்டிருந்தன. இனிமேல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை விட்டுச் சனி விலகிவிடுவதால், வருமானத்தில் உள்ள தங்குதடைகளும் நீங்கிவிடும். பற்றாக்குறை பிரச்சனைகளும் உலுக்கி எடுக்காமல் ஒதுங்கிவிடும். கொடுக்கல் வாங்கல்களில் உள்ள குளறுபடிகள் சரிப்படுத்தப்படும்.           

இதுவரை 2ஆம் இடத்து சனியின் மூன்று கெட்ட பார்வைகளில் ஒரு பார்வை, மாத்ரு பந்து சொத்து சுக சௌகரிய ஸ்தானத்திலே பதிந்து கொண்டிருந்தால், உங்களுடைய ஆரோக்கியமே திருப்திகரமாக இல்லை. சுகமாகவும் சௌகரியமாகவும் இருக்க சந்தர்ப்பமே சரிவரக் கிடைக்கவில்லை. நிம்மதியாக இருந்து ருசி பசியோடு சாப்பிடவும், போதுமான அளவுக்குக் கவலையில்லாமல் நிம்மதியாகத் தூங்கவும்கூட முடியாமல் வேலை நெருக்கடிகளும் வீட்டுச் சூழ்நிலைகளும் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தன. இந்த சிரமங்கள் இனிமேல் விலகும்.

அம்மாவுக்கிருந்த பீணி பீடைகளும் குணமாகும். அவர்களுக்கிருந்த மனக்குறைகளும் தீரும். அம்மாவை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள முடியாமலோ, அவர்களுடைய தேவைகளைத் திருப்திகரமாக நிறைவேற்ற முடியாமலோ, அவர்களுடன் அபிப்பிராய பேதத்தால் சரியான ஒட்டுறவு இல்லாமலோ இருந்தாலும் கூட, அந்த அதிருப்திகரமான நிலவரம் மாறும்.

சனியின் இதே பார்வை பதிந்திருப்பது, ஸ்திர சொத்து வாகன கால்நடை ஸ்தானமும் ஆகும். அதனால் இங்கிருந்து சனிபார்வை விலகிவிடுவதன் காரணமாக வீட்டு வசதிகளுக்குத் தடங்கலாக எது இருந்தாலும் அது விலகிவிடும். வாடகை வீட்டில் வசதி குறைச்சல், குடி தண்ணீர் அல்லது காற்றோட்ட வசதிக்குப் பற்றாக்குறை, சொந்தமாக மனை வீடு என்று வாங்குவதிலே தடை தாமதம், காலி மனையில் வீடு கட்டுவதற்கு இடைஞ்சல்கள், கட்ட ஆரம்பித்த வீட்டையோ கடையையோ முடித்து வைப்பதற்கு சிரமங்கள், சொத்துபத்துகளைப் பராமரிப்பதிலும் பழுதுபார்பதிலும் அலைகழிப்பான அல்லல்கள் என்றிருப்பவையெல்லாம் இனிமேல் நீடிக்காது. உங்களைப் படுத்திவைக்காது. அடிப்படை வசதிகளையெல்லாம் இனிமேல் ஆக்கப்பூர்வமாக அபிவிருத்தி செய்து கொள்ளலாம். ஆடு, மாடு கன்று என்று கால்நடைகளை வளர்ப்பதில் இருந்த கடுமையான கஷ்டங்களும் இனிமேல் உங்களை அவதிப்படுத்தாது.

மொத்ததில் 85 % நன்றாக இருக்கும் .

 பரிகாரம்:

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவிக்கு எலுமிச்சப்பழம் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வரவும்.பிரதி தினம் லிங்காஷ்டகம் ஜபித்து வரவும்.எழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும் .

  For more information, click on the View    

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com