கும்பராசி 

( அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம் )

     அலட்டிக் கொள்ளாமலும் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் வாழக்கூடிய சூட்சமம் தெரிந்த கும்பராசி பாக்கிவான்களுக்கு குருவருளும் திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வீர்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று தத்துவத்தை மறக்காதவர்கள் நீங்கள்.

     பணபலத்தால் மற்றவர்கள் சாதிக்க முடியாத காரியத்தை  நீங்கள் பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் மூலம் சாதித்துக் காட்டுவீர்கள். எடுத்த முடிவுகளில் அடிக்கடி மாற்றுவதில் உங்களுக்கு நிகர்யாருமில்லை புதுமையைப் போல வாழ உங்களுக்கு பிடிக்காது. சிக்கனத்தின் சிகரம் என்றுகூட உங்களை வர்ணிக்கலாம்.

    எண்ணற்ற கருத்துக்களை இதயத்தில் பதித்து வைத்திருந்தாலும் எதுவும் தெரியாததைப் போல காட்சியளிப்பீர்கள். மன உறுதியும் மற்றவர்களுக்கும் மதிப்புக் கொடுத்துப் பேசும் தன்மையும் உங்களுக்கு அதிகம் உண்டு. நட்பு வட்டம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

    குடும்பநலம், குழந்தைகள் நலம் பாதிக்கும், சண்டை, சச்சரவுகளைக் கொடுக்கும். விரக்தியால் வீட்டை விட்டுச் சிலர் வெளியேறுவர். பொருளாதாரச் சீர்கேடும் பெருங்குழப்பத்தை உண்டு பண்ணும். மனைவியின் பொருட்களை வைத்து கடன் வாங்கும் நிலை, அதனால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, குழந்தைகள் மனநிலை பாதிக்கப்படும். ஏற்கனவே திட்டமிட்டு செயல்படவிருந்த சுபகாரியங்கள் தடைபடும். உடல்நலம் பாதிக்கப்படும். தசாபுத்திகள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அஞ்ச வேண்டியதில்லை.

   அசராமல் ஓடி உழைத்த பெண்களும் அசதியை உணர்வார்கள். வயிற்று நோய்கள் வதைத்து எடுக்கும். கர்ப்பப்பை சம்மந்தமான உபாதைகள் சிலரை கலங்கடிக்கும், நோய்கள் நொடிக்கச் செய்தாலும், கந்தர்சஷ்டி கவசம் கேட்டாலும் சனிதோறும் சனீஸ்வரருக்கு மாலைப் பொழுதில் விளக்கேற்றுதலும் விமோச்சனத்தைக் கொடுக்கும். பணிமுனைவோருக்கு வேலை கிடைத்தலில் வெகுவான சிரமங்களை சந்திக்க நேரும். கிடைக்கும் பணியினைத் தக்கவைத்துக் கொள்ளும் சிரமமே. திருமணத் தடை ஏற்படும். தசாபுத்திகளின் நிலைகேற்ப சில மாற்றங்களையும் சந்திக்கலாம்.

மாணவர்கள்  விழுந்து விழுந்து படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்க முடியாது. படித்தவை மறக்கும். கற்பதில் எரிச்சலுண்டாகும். சிலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுவர். படிப்பைத் துறந்து, கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். வேண்டாத பழக்கத்திற்கு ஆளாகும் நிலை சிலருக்கு ஏற்படும். பெற்றோர்கள் எச்சரிக்கையாய் இருந்து அவர்களை காக்கும் பட்சத்தில் அவர்களை சாதனை படைக்கக்கூடியவர்களாய் மாறிவிடுவர். ஜென்ம ஜாதகத்தில் குரு உச்சம் அல்லது ஆட்சி, 4க்குரியவன் நற்பலம் புதன்சாரம் நன்றாக இருக்க நன்மை பலவும் தானாக விளையும்.

 பரிகாரம்

    வார நாட்களில் புதன் ஓரையில் பெருமாள் வழிபாடு வைத்துக் கொண்டால் வரக் கூடிய துன்பங்கள் வழிலேயே ஒதுங்கி விடும். ஜெனன நட்சத்திர நாளில் நிரை சொம்பு தண்ணீரை நுனி வாழை இலை மேல் வைத்து குபேர திசை நோக்கி பிரார்த்தனை செய்து வந்தால் அபார வெற்றியும் ஆச்சர்யப்படத்தக்க அதிர்ஷ்டமும் வந்து சேரும்

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com