மகர ராசி

 (உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்)

            

மகத்தான காரியங்களில் ஈடுபாடு உள்ள மகரராசி பக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    நினைத்ததை அடைய நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். ரகசியங்களை பேணிக்காப்பதில் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் மனோபாவம் உங்களுக்கு உண்டு.

    நண்பர்களுக்கு மத்தியில் தனி முத்திரையைப் பதித்து விடுவீர்கள். பொல்லாதவர்களைக் கூட நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்கள் பேச்சுக்கு உண்டு. பாதி வயதிற்கு மேல் தான் பலவித சுகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

    எளிய வாழ்க்கை வாழவேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். தன்னுடைய சுகதுக்கங்களைப் போல மற்றவர்களுடைய சுக சௌகரியங்களில் அக்கறை செலுத்துவதிலும் தன் குடும்பத்தைப் போல மற்றவர்களுடைய குடும்பத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    மகரராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி ஒரு பொற்காலம் ஆகும். கணவன் மனைவி இடையே இணக்கம், இன்சொல் பரிமாற்றம் இதயத்திற்கு இதமான இனிய நிகழ்வுகள் ஏற்படும் வேளை அரிய பொருட்கள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அளவில்லா மகிழ்ச்சியைத் தரும். பழைய வீடுகள் புதுப்பிக்கப்படும். புதுமனைக்கட்டும் வாய்ப்பும், இருக்கின்ற வீட்டினை விரிவுபடுத்தும் முயற்சியும் கூடிவரும். வாகனச் சேர்க்கை கூடுதல் வரவு. மக்கள் நலம் பேணப்படும். வைப்புநிதிகள் புதிய முதலீடுகள் என பொருளாதார வளங்கள் காணும் காலம். தம்பதிகள் மணமாற மற்றவர்களுக்கு உதவுவர். குருவின் ஜென்மப் பார்வை ஜாதகரை நலப்படுத்தி 7ஆம் பார்வை உடன் பிறப்புகளை வளப்படுத்தி 9ஆம் பார்வை, புத்திரர்களை செழிப்படையச் செய்து அனைத்து வழிகளிலும் நற்பலங்களைத் தரக்கூடியதாக அமைகிறது. 

பெண்கள்  பெற்றோரைச் சார்ந்து, உடன் பிறந்தோரைச் சார்ந்து உற்றார் உறவினரை அனுசரித்து வாழவேண்டிய பெண்கள், தனித்தெம்புடன் தனித்து இயங்கும் தெரியம் கிடைக்கப் பெறுவர். எண்ணங்கள் ஈடேறும் இவர்களின் செயல்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பர். பணிபெறும் முயற்சி பலந்தரும். மனதிற்கினிய வேலை, ஊதியம், செல்கின்ற இடத்தில் சிரமங்கள் இல்லாதநிலை, சகஊழியர்கள் ஒற்றுமை மேலாளர்களின் சிறப்பான வழிகாட்டுதல்கள், இதற்கு மேல் என்ன வேண்டும்? வியாழநோக்கம் விரைவாக பிடித்தமான, உயர்வான வரனைக் கொண்டு வரும். ஆஸ்தி அந்தஸ்து நிறைந்த அன்பான வரன் கிடைக்கப்பெறுவர். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மற்றவர்களின் உதவி தானாக கிடைக்கும். விளையாட்டுத் துறையில் உள்ள பெண்கள் சாதிக்கும் காலம். பாராட்டும், பரிசும் குவியும். வரவு இனங்கள் நிம்மதியைத் தரும். தொடர் தெட்சணாமூர்த்தி தரிசனமும், அம்பாள் தரிசனமும் நிறைந்த பாக்கியத்தைத் தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிகநாட்டம், கருத்தூண்றி எதையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். மனதில் ஒரு குறிப்பிட்ட பெரிய உயரிய இலட்சியத்தை நினைத்துக் கொண்டு, அதையடைவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அந்த முயற்சிகளைச் செய்து அதில் வெற்றியும் கிடைக்கும் காலம். எழுதுகின்ற தேர்வுகளில் எளிதாக 100% மதிபெண் பெறுவர். ஆசிரியர்களுக்கு அளவு கடந்த மரியாதை கொடுப்பர். உறவுகள் பொறாமைப்படுகின்ற அளவிற்கு எடுத்துக்காட்டாக அமையும். உதவித்தொகைகள், ஊக்கப்பரிசுகள், பாராட்டுகள் பெற பெற்றோர்கள் ஈன்ற பொழுதினிலும் பெரிதும் மகிழ்வர்.

பரிகாரம்

   பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து பஞ்ச பூதங்களை உள்ளத்தால் துதித்து கணவன், மனைவி இரண்டு குடும்பங்களின் வம்சாவளி தெய்வமாகிய குல தெய்வத்தை நினைத்து பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை செய்து வந்தால் தகுதிகள் மிகுதியாகி தரணியில் உயர்வீர்கள். 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com