தனுசுராசி 

(மூலம், புராடம், உத்திராடம் 1ம் பாதம்)

 

          கலவரம் நிறைந்த இந்தப் பூமியில் கௌரவமாக வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளும் தனுசுராசி பாக்கியவாங்களுக்கு குருவருளும் திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    சந்தித்த மனிதர்களின் மூலம் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ளுவீர்கள். நீங்கள் கண்ணியமானவர்கள். கனிவோடு பேசுவீர்கள். புண்ணியம் செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் எடுத்துரைப்பீர்கள் பக்கபலமாக இருப்பவர்களை கைவிட மாட்டீர்கள். பணி முடியும்வரை தூங்கமாட்டீர்கள். புகழ் பெற்ற மனிதர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கும்.

     எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே எப்பொழுதும் இருப்பீர்கள். தயாள குணம் உங்களுக்கு இருப்பதால் தான் கொடுத்தக் கடனை கூட வசூலிக்க முடியாமல் போகிறது. பக்தி மிக்கவர்களாக விளங்குவதால் பணம் கையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டீர்கள்.

    உள்ளத்தில் அன்பு செலுத்தினால் உலகத்தை வசமாக்கிக் கொள்ளலாம் என்ற தத்துவத்தை உணர்ந்திருப்பவர்கள் நீங்கள்.

    குடும்பஸ்தானம் குருவால் பார்க்கப்படுகிறது. குருநோக்க கோடி தோஷம் நீங்கும். கோடி நன்மை உண்டாகும் என்ற ஜாதக சட்டத்திற்கிணங்க குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி, கணவன், மனைவியிடையே பரஸ்பரம் நல்லுறவைக் காணலாம். ஒருவர் கருத்தில் மற்றவருக்கு உடன்பாடு இல்லாவிடிலும், எதிர்பின்றி இசைந்து செல்லும் போக்கினை உணரலாம். இனிய மொழிகள் இதயத்திற்கு இதமாக அமையும். குழந்தைகள் தொட்டு எடுக்கப்படும். தீர்மானங்கள் இல்லத்தரசியின் சபையிலே ஏற்றுக் கொள்ளப்படும். மனையாள் செய்யும் காரியங்களுக்கு மறுபேதும் சொல்லப்பட மாட்டாது. பணவரவு செலவு, பட்ஜெட் அனைத்தும் திருப்தியளிக்கும். தனகாரன் குருவின் இரண்டாமிடப் பார்வை வரவினைத் தாராளமாக்கும். சிறுவாடு சேர்க்கவும் இடமுண்டு. ஆதிபத்திய தோஷத்தால் சிற்சில சிதறல்களுமுண்டு பாதிக்காது. மனம் ஒப்பிச் செய்யும் தானம் சிதறல்களுக்கு மாற்றுவழியாக அமையும்.

  பணிபுரியும் பெண்கள் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டிய காலம் சிறிது கவனக் குறைவும் சிதறடித்துவிடும். கட்டிக்காத்து வந்த நற்பெயரை, பேச்சு பெரும் சிரமத்திற்குள்ளாக்கும். பேசாதிருத்தல் முன்னேற்றத்திற்கு தடை. இரண்டு கெட்டநிலை. தினசரி செய்யப்படும் சிறிது நேரத் தியானம் நிலையை சீர் செய்து சிறப்புகளைக் கொடுக்கும். விதி மதியால் வெல்லப்படும். வேலை தேடுவோருக்கு தற்காலிகப் பணி கிடைக்கும். பொருளாதாரம் திருப்திகரமாக அமையும். மணமாகாதவர்க்கு பெரும் முயற்சியில் மணமாகும். மனதைத்தேற்றிக் கொள்ள கூடிய வரனாகத்தான் அமையும். தொடர் தெட்சணாமூர்த்தி தரிசனம் இன்னல்கள் நீக்கி இனிமை சேர்க்கும்.

மாணவர்களுக்கு ராசிக்கு 4ஆம் இடம் குருவால் பார்க்கப்பட விரும்பியப் படிப்பு படிக்க முடியும். விரும்பிய இடத்தில் படிக்கவிலை கொடுக்க வேண்டும். கல்வி, கேள்விகளில் சிறப்பும், பாராட்டுக்களும் பெறுவர். உள்ளூர் படிப்பைத் தவிர்க்கலாம். விடிதியில் தங்குவது வில்லங்கங்களைக் கொண்டு வரும். கவனம் தேவை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பேசுகின்ற அனைவருக்கும் காதுகளை கொடுக்க வேண்டும். எவர்க்கும் வாயைக் கொடுக்கக்கூடாது. கேள், கேள், கேள், வாயைக் கொடுக்காதே கல்வி கடவுளாய் வணங்க நல்லது பிறக்கும்.

பரிகாரம்

   ஒருமுறை குரு ஸ்தலமாகிய கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஆலங்குடி அல்லது தஞ்சைக்கு அருகிலுள்ள திட்டை சென்று தெட்சிணாமூர்த்தியை வணங்கி வருதல், மாதம் ஒருமுறை உள்ளூர் சிவாலயத்தின் தெட்சணாமூர்த்தி சன்னிதானத்தில் செய்யப்படும் சுண்டல் விநியோகமும் விமோச்சனத்தைக் கொடுக்கும்.   

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com