விருச்சிகராசி

 

     (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

 

வெற்றிகளை குவிப்பதால் விருப்பங்கள் நிறைந்த விருச்சிகராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குவீர்கள். பிடிவாதகுணமும், கேட்பவர்களை தன்வசமாக்கிக் கொள்ளக்கூடிய பேச்சாற்றலும் கொண்டவர். நீங்கள் எல்லாம் தெரிந்தவர். அதனால் மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொள்ள மாட்டீர்கள்.

     இறையருளை இயற்கையிலேயே பெற்ற எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நீங்கள் எந்தக் காரியத்தையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செய்து சாதனையாளராகத் திகழ்வீர்கள். தேனீக்கள் போல எந்நேரமும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். லட்சம் லட்சமான வந்தாலும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதால், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகவே இருக்கும்.

    ராசிக்கு 2ஆம் இடம் குருவினுடைய ராசி குறை சொல்ல முடியாத கிரகம். குறை கூற முடியாத ஸ்தானம். குருஇருக்க, குரு பார்க்க, குருசாரம் பெற்ற எந்த ராசிக்கும் அனைத்து தோஷங்களும், குறைகளும் நீங்கும். குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். மேம்பாட்டையும், தனபிராப்தி தாராளமாகும். பேச்சுக்களில் இனிமை, கனிவு காணப்படும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். எனவே குடும்ப மேம்பாட்டிற்குரிய திட்டங்களைத் தீட்டுவதுடன் நிறைவேற்றவும் செய்யலாம். இல்லத்தரசி கைகளில் காசு தங்கும் காலம். எதைச் சொன்னாலும் கணவர் தஞ்சாவூர் பொம்மையாகத் தலையாட்டுவார். இந்த ராசிக்காரர்களின் குடும்பம் ஒரு மாடல் குடும்பமாக மாறுகின்ற அளவிற்கு குருபெயர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

    பெண்கள் வாழ்வில் மங்களம் பொங்கும் நேரம். நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும் நேரம். ஆரோக்கியம் சீராகும். நோய்நீங்கும். புதிய உற்சாகம் மனதில் தோன்றும். உடன் பிறப்புகளுடன் இனிய உறவும், உற்றார் உறவினர் ஆதரவும் கிட்டும். குருவின் அருளால் நல்ல வரன் அமையும். பணி முனைவோருக்கு இந்த ஆண்டு பணி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிட்டும். நல்ல பணியிலுள்ள, ஆஸ்தி, அந்தஸ்த்துள்ள வரன் அமையும். மஞ்சள் முகத்தில் பூசி மங்களக்குங்குமம் நெற்றியிலிட்டு வியாழன் தோறும் பகவானை தரிசித்துவர பாக்கியவதி எனச் சொல்லுகின்ற அளவிற்கு மணவாளனை அமைத்துத் தருவார்குருபகவான்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் குருபெயர்ச்சி. பாடங்கள் எளிதில் புரியும். நீண்ட நாட்களாக விடைகிடைக்காத வினாக்களுக்கு விடை கிடைக்கும் 100% மதிபெண் மிக எளிதாகக் கிடைக்கும். ஆசிரியர், மாணவர் உறவு மேம்படும் சக மாணவர்களோடு ஒற்றுமையாக குழு படிப்பில் ஈடுபடுவர். குழு விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறும் நேரம். பேச்சுத்திறன் பெருகும். மேடைப்பேச்சு, பட்டிமன்றம், வினாவிடை மேடைகலகலக்கும். திறமை வெளிப்படும். பளிச்சிடும். பேச்சுக்கள் பல பரிசுகளை வென்று தரும். வியாழந்தோறும் செய்யப்படும் விடியற்காலை தரிசனம் வெற்றிகளைக் குவித்திடும்.

பரிகாரம்

   வினைகளைக் களந்து, வெற்றிகளை தரக்கூடிய விநாயப்பெருமாளை விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிரார்த்தனை செய்து வரவும். சந்தோஷம் அதிகரிக்க சனிக்கிழமை நாட்களில் வஸ்திர தானம் செய்து வழிபாடு செய்யவும். 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com