துலா ராசி

 

(சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி விசாகம் 1,2,3ம் பாதங்கள்)

நேர்மையான எண்ணமும் மேன்மையான செயல்களும் நிறைந்த துலாம் ராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

     எல்லா நாட்களும் இனிய நாட்களாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். நீதி நேர்மைக்கு கட்டுபட்டவராகவும் ஒளிவு மறைவின்றி பேசுபவராகவும் விளங்குவீர்கள்.

     உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பதால் இரக்க குணமும் ஒருசில சமயங்களில் வந்து அலைமோதும். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் நீங்கள்.

    இன்பங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் பெற்றவர்கள் நீங்கள். உலகத்தில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்தையும்  நீங்கள் காண வேண்டுமென்றும், அனுபவிக்க வேண்டுமென்றும் விரும்புவீர்கள். எந்த செய்தியையும் உங்களுக்கு தெரிந்தது போலவே காட்டி கொள்வீர்கள். அதனால் சில சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்படலாம்.

    ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த நற்செயல்கள், சுபகாரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு இறுதியில் நன்மையாக அமையும். கணவன் மனைவியிடையே சிறு கருத்து வேறுபாடும். உடனடிச் சமாதானங்களையும் காணலாம். மனைவியின் கை ஓங்கி நிற்கும். ஆண்கள் பொறுத்துப் போக வேண்டிய காலம். ராசிக்கு 2ம் இடம் விருச்சிகம், செவ்வாய்யின் ராசி, ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம், கேந்திர திரிகோணம் ஏறியிருந்தால் பெரும் பணச் செலவில் அற்புதமான மண், மனை சேர்க்கையுண்டு. செவ்வாய் ராசியிலும், அம்ஸத்திலும் ஒரு ராசியில் ஏறி வர்கோத்தமநிலை பெற்றிருந்தால், மனை அல்லது தனம் தொட்டு, இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

   பெண்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த தொகைகள் செலவாகும். நேரம், சிந்தித்துச் செயல்பட சிறுவாட்டுப் பணம் செம்மண்ணிற்காக செலவாகும். தங்கள் பெயரில் மனை அமையும் நேரம். படித்த பெண்களுக்கு பணி பெறுவதற்கு சற்று செலவாகும். நிரந்தரப் பணி நிச்சயமாகச் சிலருக்குக் கிடைக்கும். பணியிலிருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வயிறு, இரத்தம் சம்மந்தமான நோய்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாய்ப்புள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வரலாம். கந்தர்சஷ்டி கவசம் கேட்டல், நல்ல ஆரோக்கியத்தை நல்கிடும்.

   மாணவர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறப்புண்டாகும். நல்ல மதிப்பெண், நற்பெயர் கிட்டும். எதிர்பார்த்த கல்வியினைப் பெறலாம். எதிர்பார்த்த இடத்தில் கிடைக்காது. கிடைத்தயிடம் சந்தர்ப்பவசத்தால் நல்லதாகும். புதிய நண்பர்கள் சேர்க்கை கொடுக்கும். செலவையும் ஏற்படுத்தும். பெருஞ்சிறப்புகளையும் கொடுக்கும். விடுதியில் தங்குவது நல்லது. உறவினர் வீட்டில் தங்குவது, உறவை பாதிக்கும். விளையாட்டுக்கல்வி கற்போர்க்கு படிப்பு முடியும்முன்னே பணி கிடைக்கும்.

பரிகாரம்

    நிற்கதியாக நின்று தவித்த உங்களுக்கு நற்கதிவந்து சேர பௌர்ணமி திதியில் நங்கநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்யுங்கள். அரசமரம் பிள்ளையாரை அதிகாலை வலம் வந்து அடிமனதில் பிரார்த்தனை செய்ய அருள் கிடைக்கும். குடும்பம் மேன்மை கிட்டும். 

 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com