கன்னிராசி


    (உத்திரம் 2,3,4ம் பாதங்கள் ஹஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்)

வாழ்க வளமுடஇளமையான எண்ணங்கள் மூலம் வளமையான வாழ்வை அனைத்துக் கொள்ளும் கன்னிராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

   திட்டம் போடுவதிலும் அதைச் செயலாக்குவதிலும் வல்லவர்களாக விளங்குவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடின உழைப்பும், விவேகமும் கொண்டவர்கள் நீங்கள்.

    சிக்கனம் வீட்டைக் காக்கும். சேமிப்பு நாட்டைக் காக்கும் என்ற வைர வரிகளை வாழ்க்கையில் செலவு செய்யவும் அஞ்சமாட்டீர்கள். உங்களுக்கு கற்ற கல்வியைக் காட்டிலும் பெற்ற அனுபவமே கை கொடுத்து உதவும்.

    தனக்கு தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ள ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள். தெய்வ நம்பிக்கையும், திறமையும் உங்களோடு இணைந்து செயல்படுவதால் மலைபோல் வந்த துயர் பனிபோல விலகிவிடுகிறது. சாதுவைப் போல காணப்படும் நீங்கள் சகலகலா வல்லவர்களாக விளங்குவீர்கள். பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

     ராசிக்கு 2ல் சுக்கிரனின் இல்லம் 9ஆம் இடத்திற்கும் சுக்கிரனே அதிபதியாகிறார். இரண்டு இடங்களும் பலம் பொருந்தியவைகள். ஜாதகத்தில் சுக்கிரன் நிலை நன்றாக இருந்தாலோ, மத்திமமாக இருந்தாலோ, பயப்பட வேண்டாம். குரு பெயர்ச்சியினால் ஏற்படும் குழப்பங்கள் குறையும். ஆனால் முற்றிலும் நீங்காது. சற்றே சலசலப்பு. அவ்வளவுதான் மற்றபடி இல்லறச் சௌகரியம் இடையூறுகளைச் சந்திக்காது. சிறிது தாஜா இல்லத்தரசியை உன்முகம் காட்டச் செய்யும். தனவரவுகளில் தடங்கல்கள் இருந்தாலும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து வராமல் சற்றும் எதிர்பாராத வழிகளிலிருந்து பணம் வந்து சேரும். தொலைதூரச் செய்திகள் ஆறுதலாக அமையும். கனிவான சொற்கள், கோபம், தவிர்த்தல் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுக்கும்.

   கல்வி பயின்று கொண்டிருக்கும் பெண்கள் இந்த ஆண்டு மட்டும் விடிதியில் தங்கும் நிலை அல்லது பெற்றோரை விட்டுப் பிரிந்து, உறவினர்கள் வீட்டில் இருப்பது நல்லது. பாதுகாப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்தை திறமை வாய்ந்த ஜோதிடரிடம் பார்த்து சமயோசிதமாக நடந்து கொள்ளவும். சிலருக்கு சிரமத்தில் திருமணம் நடைபெறும். கூடுமானவரை திருமணத்தைப் பேசி முடிவு செய்து கொள்ளலாம். அடுத்த பெயர்ச்சியின் போது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு உண்டு. குறைவான வருமானம் கிடைக்கும்.

   மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். நண்பர்களுடன் சேர்ந்து பாடம் மட்டும் படிக்கலாம். அரட்டை அடித்தல், சாலைகளில் சுற்றிதிரிதல், பெண்களைக் கேலி, கிண்டல் செய்தல் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும். ஒழுக்கத்தில் கவனம்  தேவை. தேவையற்ற கெட்ட பெயர் தேடிவரும். கல்வியில் நாட்டம் குறைய, கேளிக்கைகளில் நாட்டம் அதிகமாகும். பெற்றோருக்கும் நற்பெயர் வாங்கிக் கொடுக்க முடியாது. உரியத் தேர்வுகள் எழுத தடைகள் ஏற்படும். பெற்றோர் பெரியோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுதல் நல்லது.

பரிகாரம்

  உச்சிப் பொழுதில் பச்சை வஸ்திரம் அணிந்து, உள்ளத்தில் பெருமாளை துதித்து புதன்கிழமை நாளில் வெண்பொங்கல் தானம் செய்து வந்தால் இழந்த செல்வமும், தொலைந்த நிம்மதியும் திரும்ப கிடைக்கும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com