சிம்ம ராசி 

(மகம், பூரம், உத்திரம்1ம் பாதம்)      

 

அன்பு செலுத்துவதில் கூட அதிகாரத்தை வெளிப்படுத்தும் சிம்மராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    செல்லும் இடங்களிலெல்லாம் செல்வாக்கு அதிகம் பெற்றிருப்பீர்கள். பகைவர்களைக் கூட தங்கள் வெற்றிக்கு படிக்கட்டுக்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவர் நீங்கள்.

     பாசத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்களிடம் பழகுவீர்கள். கட்டுப்பாடு உங்களுக்கு பிடிக்காது. நீங்கள் அன்பிற்கு மட்டும் தான் கட்டுப்படுவீர்கள். பிடிவாதத்தையும், முன்கோபத்தையும் தளர்த்திக் கொண்டால் பிரியமானவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ள இயலும்.

    உங்கள் பாணி ஒரு தனிப் பாணி, செங்கமலம் போல சிறித்துக் கொண்டும் பேசுவீர்கள். திடீரென்று கோபப்பட்டு சீறிக் கொண்டும் பேசுவீர்கள். உங்களை புரிந்துக் கொள்ள ஈசனாலும் முடியாது என்று உலக மக்கள் கூறுவர். உங்களுக்கு எதிராக செயல்படும் மனிதர்களை ஒருகை பார்க்காமல் விட மாட்டீர்கள். பொதுநல ஈடுபாடு இருந்தாலும் சுயநலமும் அதில் குடிகொண்டு இருக்கும்.  

    குடும்பஸ்தானத்தில் குரு அமர, இதுவரை குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள், குதர்க்கங்கள் கோபதாபங்கள் மறைகின்ற நேரம், நல்ல குடும்பம், ஒரு பல்கலைக்கழகம் என்பதை தம்பதியினர் உணர்வர். கணவன், மனைவிடையே ஆசை, அரவணைப்பு, பாசம், பரிவர்த்தனைகள் ஆறாய் பெருகும். குழந்தைகளைக் கொஞ்சல், பெற்றோரைப் பேணிக்காத்தல், கனிய இனிய மொழிகளை பேச வைத்தல் அனைத்தும் இரண்டாமிடத்து குருவாகும். விரும்பிய நாவிற்கினிய நல்லுணவு வேண்டிய நேரத்தில் கிடைக்கச் செய்வர். ராசிக்கு இரண்டிலுள்ள குரு, தொடர் தெட்சணாமூர்த்தி தரிசனம் குடும்பத்தை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

    சந்திரனுக்கு 2ல் குரு வியாழ நோக்கம். மணவேளை கிடைத்திடும் மனம் விரும்பிய மாலை. கண்ணிற்கினிய கணவராய், கருத்து ஒருமித்தவராய், வெட்டியெடுத்த தங்கமாய் அளித்திடுவார். வியாழபகவான், ஆசைகள் அரங்கேறும். அன்பு நடனமாடும், தனப்பெருக்கம் தானாக வந்து சேரும். குரு அருளால் குழந்தை பாக்கியம் உண்டு. மஞ்சள் முகத்தில் பூசி, மங்களக் குங்குமம் நெற்றியிலிட்டு மௌனமாய் செய்யப்படும் தெட்சணாமூர்த்தி தரிசனம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.

    நான்காம் இடத்திற்கு 11ல் குரு நல்லதொரு கல்வியைத் தந்திடுவார். இதுவரை மண்டு, இப்பொழுது அறிவுக்கொழுந்து புரியாத பாடம் புரியும். தெரியாத விடைகள் தெரியும். மாணவர்கள் அன்னை தந்தையரும், ஆசிரியரும் பாராட்டத்தக்க செயல்பாடுகளைச் செய்வர். உழைப்பால் உற்சாகம் ஏற்பட, உயர்வு தானாக வரும். விளையாட்டில் விவேகம், வெற்றியைக் குவிக்கும். சாதனைகள் படைக்க சௌகரியமான நேரம் சர்க்கார் விருதுகள் சந்தோஷம் அளிக்கும்.

பரிகாரம்

   அம்பாளுடன் அமர்ந்திருக்கும் நவகிரக தரிசனமும், அதற்குச் செய்யப்படும் அபிஷேகமும், தொடர் தட்சினாமூர்த்திக்கு முல்லை மலர் சாத்தி வருதலும் உகந்தது. நலம் பல பயக்கும். நன்மையைப் பெருக்கும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com