கடகராசி 

 ( புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் )

   திட்டமிட்ட காரியங்களை நஷ்டமில்லாமல் செய்து முடிக்கும் கடகராசி பாக்கியவான்களுக்கு, குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

   கட்டளையிட்டால் செய்ய காத்திருக்கும் பலரை கையில் வைத்திருப்பீர்கள். எதற்கும் கலங்காத மனமும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத குணம் பெற்றவர் நீங்கள். கண்ணியமும், நிதானமும் உள்ளவர்கள். இருப்பினும் பக்கபலமாக வைத்திருக்கும் நண்பர்கள் வட்டத்தில் பாதிக்கும் மேல் வி.ஐ.பிக்கள் என்பதால் எதையும் பொருட்படுத்தமாட்டீர்கள். உங்களிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் உற்சாகத்தோடு செயல்படுத்திக் காட்டுவீர்கள். யாரை எப்படி அணுகினால் காரியத்தை முடிக்கலாம் என்ற கலையை கற்று வைத்திருப்பீர்கள்.

    சேவைக்கென்ற பிறந்தவர்கள் நீங்கள். அரசியலாக இருந்தாலும் சரி ஆன்மிகமாக இருந்தாலும் சரி பரபரப்பாக செயல்பட்டு பதவியை கைப்பற்றி கொள்பவர்கள் நீங்கள்தான். எல்லா துறைகளும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள்.

   `எதற்கு எடுத்தாலும் கோபம் வரும். யோசிக்காமல் காரியங்கள் செய்து, இடர்களுக்கு ஆளாகலாம். கணவன் மனைவி ஒற்றுமை கானல்நீராகலாம். கட்டுகடங்காத செலவுகள் கதிகலங்க செய்யும். வருமானம் வந்ததே தெரியாது. ஜென்ம ஜாதகத்தில் குரு 4,7,10 அல்லது 5-9 அல்லது ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பொருள் வரவு சீராக இருக்கும். வெள்ளிதோறும் மாலை 5.30 முதல் 6.30க்குள் சிவன் கோயிலில் உள்ள அம்பாளை தரிசனம் செய்வது, குடும்பக் குழப்பங்களை நீக்கி, வரவுகளைப் பெருக்கி, குதூகலத்தை உண்டாகும்.

     பெண்கள் மணம் ஆகாத பெண்களுக்கு திடீர் திருமணங்கள் முடிவாகலாம். நினைத்த வரன் அமையாது. தற்காலிக வேலை படித்த பெண்களுக்குக் கிடைக்கலாம். வெளியூரில் பணிபுரியும் பெண்கள் வீட்டிற்குத் திரும்பும் நிலை உருவாகும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாழன் தோறும் செய்யும் தொடர் தெட்சணாமூர்த்தி வழிபாடு நினைத்தை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும்.

    மாணவர்கள் விரும்புகின்ற படிப்பு கிடைப்பதற்கு பெரும் பிரயாசை பட வேண்டும். சிலருக்கு படிப்பு தடைபடும். தேர்வில் தேர்ச்சி பெறுவதில் கடினமான நிலை உண்டாகும். மாணவியருக்கு திடீர் திருமணங்களால் கல்வி தடைபடும். ஒழுக்க நடவடிக்கை காரணமாக சிலர் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியேறலாம். ஆசிரியர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆசியர்கள் அறிவுரையின் படி நடந்தால் நன்மை பயக்கும். 

பரிகாரம்

   மனதில் நினைத்த மாற்றம் கிடைக்கவும் எடுத்த காரியங்களில் ஏற்றம் பெறவும் மதுரை மீனாட்சி அம்மனை மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மூன்றாம் பிறை நாளில் நெல்மணியில் பெயர் எழுதி பிரார்த்தனை செய்து வந்தால் முன்னேற்றம் அதிகரிக்கும். 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com