மிதுன ராசி

 

 (மிருகசீரிகம் 3,4ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)

மற்றவர்களுக்கு உபயோகமாக விளங்கும் மிதுனராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

   எல்லோரிடமும் எளிதாக நெருங்கியப் பழகும் இனிய சுபாவத்தை பெற்றவர் நீங்கள். சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள்.

   பல புத்தகங்களை படிப்பதில் விருப்பம் கொண்டவர். எந்நேரமும் சிரித்த முகத்தோடு இருப்பீர்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம். கலைகளிலும், பாடல்களிலும் உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று முன்னேற நினைப்பீர்கள். தெய்வ நம்பிக்கை நிரம்ப பெற்றிருப்பீர்கள்.

   நீண்ட நாட்களாக கனவு கண்டு கொண்டிருந்த நன்மனை பாக்கியம் ஏற்படும். இருக்கின்ற இடத்தை விட்டு சற்று தூரத்தில் அமையும் மனை தொட்டு சரியான ஆதாரம் இல்லாமல் யாரிடமும் பணத்தைக் கொடுக்க வேண்டாம். ஜாதகத்தில் தசாபுத்திகளில் நிலைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். குரு 9ஆம் பார்வையாக 12ம் இடம் ஆகிய சுக்கிரனுடைய ராசியைப் பார்த்தால், ஆடை ஆபரணச் சேர்க்கைக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு வைரநகை வாங்கும் வாய்ப்புண்டு.

   பெண்களுக்கு ஆதிபத்திய தோஷத்தால் அலைந்து திரிந்து மாப்பிள்ளை தேட வேண்டியிருக்கும். கைப்பொருளை விற்று கல்யாணம் ஆகும்நிலை. படிக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் வராது. தற்காலிக பணிகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாகவோஅல்லது மேலதிகாரிகளால் சிரமம் ஏற்படும் வாய்ப்புமுண்டு. தொடர்ந்து செய்யும் குரு தரிசனம் சிரமம் போக்க வல்லது.

    மாணவர்களுக்கு எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிட்டாது. கல்விக்கடன் ஏற்படும். எதிர்பாராத விதமாக சிலருக்கு தேர்வு எழுத முடியாதநிலை உண்டாகும். 12ஆம் இடமாகிய சுக்கிரனுடைய வீட்டை குருபார்ப்பதால் கல்வியில் நாட்டம் குறைவு ஏற்படும். ஆட்டம் பாட்டத்தினால் பெயர் கெடும். நண்பர்கள் சேர்க்கை நல்ல பாம்பின் சேர்க்கையாக முடியும் பௌர்ணமியன்று வெறும் வயிற்றில் செய்யப்படுகின்ற அம்பாள் தரிசனம் புத்திகூர்மையை ஏற்படுத்துவதுடன், சிந்தனைச் சிதறலைத் தடுத்துச் சிறப்புச் செய்யும்.

பரிகாரம் 

  4ஆம் இடம் தாயார் ஸ்தானம், பெற்றோர் முன்னோர்களை வழிபடுதல், தாயார் முகத்தில் விழித்துவிட்டு வெளியே செல்லுதல், மனைவி கணவன் முகத்தில் விழித்துவிட்டு செல்லுதல், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுதல் சிறந்தது. மாதம் ஒருமுறை அருகில் உள்ள சிவஸ்தலத்திற்கு சென்று தெட்சிணாமூர்த்தியை தரிசித்து வருதல் நன்று. 

 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com