ரிஷபராசி 

   (மிருக சீரிஷம் 1,2 பாதங்கள் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி)

களையான தோற்றத்தாலும் கனிவான பேச்சுக்களாலும் கடுமையான காரியங்களைக் கூட எளிதாக, சாதிக்கக் கூடிய ரிஷபராசி பாக்கியவான்களுக்கு குருவருளும் திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

   களைப்பை மறந்து உழைப்பையே மூலதனமாக்கிச் செயல்படுவீர்கள். எல்லோர் மனதிலும் எளிதில் இடம் பிடிப்பதில் சாமர்த்தியம் மிக்கவர்கள் நீங்கள்.

    சந்திரன் உச்சம் பெறுவது உங்கள் ராசியில் தான் என்பதால் சிந்தனை வளம் மிக்கவர்களாக விளங்குவீர்கள். வந்தனை செய்யும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள். மந்தன் எனப்படும் சனி உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாகும். அள்ளிக் கொடுக்கும் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதி என்பதால் சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக அமையும்.

   தம்பதியரின் ஒற்றுமை தலைத்தோங்கும், ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் ஒரு முடிவும் எடுக்கமாட்டார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டு. வாகன வரவிற்குவழியுண்டு. வங்குயில் இருப்பு வளர்ச்சி பெறும். குழந்தைகள் விரும்பிக் கேட்டாதைப் பெருமகிழ்வோடு பெற்றுத் தருகின்ற காலம். பயணங்களுக்கும் ஸ்தல தரிசனத்துக்கும் குடும்பதோடு சென்று வரும் வாய்ப்புண்டு.

   மணமாகாத பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையும். சிலருக்கு மாமாவே மாப்பிள்ளையாகும் வாய்ப்புண்டு. கருத்து வேறுபாடால் கணவனை கைவிட்டுப் பிரிந்து இருக்கின்ற பெண்கள், வேறுபாடு மறைந்து மீண்டும் இணைகின்ற காலம். மக்கட்பேறு நீண்ட நாட்களாக இல்லாதவர்களுக்கு மக்கட்செல்வம் கிடைக்கும். வேலை தேடும் பெண்களுக்குத் தற்காலிக வேலை கிட்டும். வறுமையில் வாடும் மாந்தர்களை இப்பெயர்ச்சி சிறு தொழில் துவங்க வைத்து சிறப்புச் செய்யும். பணிபுரியும் பெண்களுக்கு பதவு உயர்வும், கூடுதல் வருமானமும் ஏற்படும். பிறநாடுகளில் குடியேறும் வாய்ப்பும் சிலருக்குக் கிட்டும்.

    விரும்பிய கல்வி கிடைக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் சொல்கேட்பர். எழுதாத வினாவிற்கும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் யோகமுண்டு. ஜென்ம ஜாதகத்தில் புதன், குரு ஆதிக்கம் நல்லபடியாக இருந்து அவர்கள் திசைபுத்தி நடக்கின்ற காலமாகவும் இருந்தால், இந்தப் பெயர்ச்சி, மாநிலத்திலேயே முதல் மாணவராக வருகின்ற வாய்ப்புண்டு. சிலருக்கு படிப்பு முடிக்கும் தருணத்திலேயே பணி நியமனம் கிடைக்கப் பெறுவார். 

பரிகாரம்

   வெள்ளிக்கிழமை நாட்களில் வெண்பட்டு வஸ்திரம் அணிந்து அம்பிகை வழிபாடு வைத்துக் கொண்டால் நம்பிக்கையான நல்வாழ்வு நிச்சயம் அமையும் குருவருளும் திருவருளும் குடைத்து குடும்ப மேன்மை கிட்டும்.  

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com