மேஷ ராசி

அஸ்வினி, பரணி ( கிருத்திகை 1 ம் பாதம் ) 

           மேன்மையான எண்ணங்களும் மேலான சிந்தனைகளும் இயல்பாக அமையப் பெற்ற மேஷராசி பாக்கியவான்களுக்கு, குருவருளும் திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிநாதன் செவ்வாய் தைரியகாரகன் என்று வர்ணிக்கப்படுவர் செவ்வாய் ஆட்சியும், சூரியன் உச்சமும், சனிநீச்சமும் அடைவதால் வீரம், விவேகம் அதிகம் காணப்படும். சந்தர்ப்பத்தை எண்ணிக் காத்திருக்கும் நீங்கள் சமயம் வரும்போது எதிரிகளைப் பந்தாடி வெற்றி காண்பீர்கள். வம்பு, வழக்குகளில் சிக்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். வளைந்துக் கொடுத்து காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்.

     கணீர் என்ற குரலுக்கு சொந்தக்காரர்களாவும் கடமைதான் பெரிது என்று செயல்படுபவர்களாகவும் விளங்குவீர்கள். தன்னை நம்பியவர்களுக்கு எந்த நேரமும் கைகொடுத்து உதவுவீர்கள்.

     காரணமேயின்றி கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பொறுத்துப் போக வேண்டிய காலம். பொறுமையின்மை தனிப் பொங்கல் வைக்கும் நிலையை ஏற்படுத்தி விடும். கட்டுகடங்காத செலவுகள் சில குடும்பங்களை கலங்கடித்து விடும். வைத்த பொருட்களை மீட்க முடியாது. பயணச் செலவுகளும் பயமுறுத்தும், போக்குவரத்தில் கவனமின்மை, குடும்பக் குழப்பங்களை நினைத்து கொண்டு இரு சக்கரவண்டிகளில் செல்வது, 108ல் பயணம் செய்யும் நிலையை ஏற்படுத்தும். குருவின் 6ம் இடத்திலிருந்து வாக்கு ஸ்தானமாகிய 2ம் இடத்தை பார்ப்பது, பேச்சில் கவனம் தேவை, நாவடக்கம் அவசியமாகிறது. சொற்கள் சொந்த பந்தங்களைப் பிரிக்கும். வம்பு வழக்குகளைச் சேர்க்கும் மௌனம் மட்டற்ற மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

 

மணமானவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள். உணவு விஷயத்தில் நேரத்திற்கு முறையாகச் சாப்பிடுதல் நல்லது. தூக்கம், ஓய்வு அவசியம். வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டிக் கொண்டு பேசாதிருத்தல் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு காதல் உணர்வு ஓங்கி நிற்கின்ற நேரம். குரு நன்மை செய்வது போல் தோன்றி, இறுதியில் நட்டாற்றில் விட்டு விடுவார். எனவே காதல், கத்தரிக்காய் எல்லாம் வேண்டாம். மனதைக் கட்டுப்படுத்துங்கள், மற்றவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள். பெற்றவர் சொல்லைக் கேளுங்கள் குருபகவான் அருளால் குறைவில்லா வாழ்வு அமையும்.

     பணிபுரியும் பெண்களுக்கு மேலாளர்கள், உயர் அதிகாரிகளால் சிரமம் ஏற்படும். சமயோசிதமாகத் தப்பித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பணி மாற்றமும் பயன்தரும். காலை எழுந்ததும் சில நிமிடத் தியானம் அமைதியையும் பெருஞ்சிறப்பையும் கொடுக்கும்.

   மாணவர்களைப் பொறுத்தமட்டில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது. கல்விக் கடன் ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடை, ஓராண்டுப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடிக்கும் நிலைக்கு ஆளாகலாம். வியாழன்தோறும் வெறும் வயிற்றில் வியாழ பகவானைத் தரிசனம் செய்தால், விரும்பிய படிப்பும், மதிப்பெண்ணும் பெறலாம்.

பரிகாரம்

    வியாழன் தோறும் குருவழிபாடும் பிரதோஷத்தன்று சிவஸ்தல தரிசனமும் செய்ய நல்லது நடக்கும். 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com