தமிழ் ஜோதிடம்: ஜோதிட கணிதம் / ஜாதகம் கணிக்க.

ஜாதக கணிதம் பல சூட்சமங்களை கொண்டது. துல்லியமான விபரங்களால் மட்டுமே மிக சரியான ஜாதகத்தினை உருவாக்க முடியும். தற்காலத்தில் பல மென்பொருட்கள் (Software) கொண்டும் ஜாதகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஜாதகம் (Horoscope) கணிக்க ஐந்து விஷயங்கள் தேவை.

௧. குழந்தை பிறந்த துல்லியமான நேரம்

௨.ஆணா / பெண்ணா என்ற விபரம்

௩. பிறந்த ஊர்

௪. பிறந்த தேதி.

௫. அன்றைய வருட வாக்கிய அல்லது திருக்கணித பஞ்சாங்கம் (Almanac)

இவை இருந்தால் மட்டுமே ஒரு ஜாதகத்தை கணிக்க இயலும். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் சில வித்யாசங்கள் உண்டு.

அதாவது ஒரு ஜாதகம் வாக்கிய பஞ்சாங்க படி (முன்னோர்கள் ஞான திருஷ்டியால் எந்த உபகரண உதவியும் இல்லாமல எழுதியது )கணித்த ஜாதகத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கம் (ராஷ்ட்ரிய பஞ்சாங்க சேவை சங்கம் ) என்ற அரசுத்துறை கணித்த தொலை நோக்கி கருவிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி துறை உதவியுடன் கணிக்கப்பட்டது.)மூலம் கணித்த ஜாதகதிற்கும் ஒரு பத்து அல்லது இருபது நாள் திசை புக்தி விபரங்கள் வித்தியாசப்படும்.

உதாரணம் செய்திதாள்களில் சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்றவை ஒரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் மற்றொரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் குறைந்தது மூன்று மாத வித்தியாசத்துடன் இருக்கும் .

ஜோதிட கணிதம் மிக துல்லியமான கணிதங்களை கொண்டது. பாகை, கலை, விகலை, நவாம்சம், பாவம், திரிகோணம், துவதாம்சம், சப்தாம்சம், தசை, புக்தி, அஷ்டவர்க்கம், என பல கணிதங்களை வினாடி சுத்தமாக கணிதம் செய்ய வேண்டி உள்ளது. ஆக நமக்கு தேவையான கணிதத்திற்கு உகந்த பஞ்சாங்கம் வேண்டும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com