தமிழ் ஜோதிடம்: ஜோதிட அடிப்படை / பணபரம் என்றால் என்ன?

பணபரம் என்ற ஸ்தானம் தமிழ் ஜோதிடத்தில் ஒருவரின் வருமானம் சம்பந்த கேள்விகளுக்கு விடை சொல்ல உதவுகிறது. தன ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், லாப ஸ்தானம் போன்றவை இதில் அடங்கும்.

பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.

பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com