தமிழ் ஜோதிடம்: ஜோதிட அடிப்படை / ஜாதகம் கணிப்பது எப்படி?

ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் அறிவியல் கணித துறை . இதில் முழுமை பெற்றவர்கள் எவரும் இல்லை. அவரவர் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பரிட்சித்து பார்க்கவும், கணிதப்படி நிகழ்வுகள் நடந்தால் தமது எதிர்காலத்தினை ( Future prediction ) எவ்வாறு நடத்திக்கொள்ளலாம் என்ற மார்க்கம் தெரியும் என்ற முயற்சியோடு ஜோதிடத்தினை கையில் எடுக்கிறார்கள்.

இன்றைய கால கட்டங்களில் ஒரு ஜாதகத்தை தயார் செய்ய பலவித கணினி மென்பொருட்கள் வந்துள்ளன. இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தவிர மற்றவை தவறான கணக்கீடுகள் கொண்டுள்ளன. இவை ஒரு புறம் இருக்க ஒரு ஜாதகத்தை உருவாக்குவதற்கு என்ன தேவை, எப்படி ஒரு ஜாதகத்தை உருவாக்குவது என்று பார்ப்போம்.

ஒரு ஜாதகத்தை உருவாக்க :

1. பிறந்த நேரம் 
2. பிறந்த தேதி 
3. பிறந்த தேதி அன்று சூரியன் உதயமாகும் மணித்துளி (நேரம் ) 
4. அன்றைய தின பஞ்சாங்கம் (வாக்கியம் அல்லது திருக் கணிதம் ) 
5. பிறந்த தேதி பல வருடங்களுக்கு முந்தையதாக இருந்தால் அன்றைய வருட பஞ்சாங்கம்

இவை இருந்தால் ஒரு ஜாதகத்தை உருவாக்கலாம். வாக்கியம் மற்றும் திருக் கணித பஞ்சாங்கங்கள் சில வித்தியாசங்களை கொண்டுள்ளது என்பதால். ஒருவருடைய தசா புக்தி இருப்பு கணக்கில் நிச்சயம் வித்தியாசத்தை காணலாம். அதாவது ஒரு ஜாதகரின் ஜாதகம் பிறந்த தேதியன்று ஆரம்ப தசா இருப்பு பத்துவருடம் என்றால் திருக்கணித ரீதியாக கணிக்கப்பட்ட ஜாதகம் ஆரம்ப தசா இருப்பு பத்துவருடம் இரண்டு மாதம் என கணிதம் வரும். ஆக ஒரு தசா முடிந்துவிட்டது என்று திருக்கணிதமும் ஒரு தசா முடிய இன்னும் பல மாதங்கள் பாக்கி உள்ளது என்று வாக்கிய கணிதமும் அறிவுறுத்தும்.

மேலும் ஜாதக கணிப்பு விபரங்கள் இங்கு சில நாட்கள் கழித்து எழுதப்படும்.tml#sthash.vEORZDcV.dpuf

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com