தமிழ் ஜோதிடம்: ஜோதிட அடிப்படை / நவ கிரகங்கள் கணிப்பு, ஜாதக பலன்கள்.

ஜாதகம் என்றால் வான சாஸ்திரத்தின் படி நமது பிறப்பின் அடையாள அட்டையாகும். நமது பிறந்த நேரம், பிறந்த ஊர், பிறந்த தேதி மற்றும் கிழமை போன்ற நமது உயிரியல் விபரங்களை உள்ளடக்கியது. இதன் மூலம் நமது எதிர்காலத்தினை ஓரளவு முடிவு செய்ய இயலும்.

 ஜாதகம் என்றால் வான சாஸ்திரத்தின் படி நமது பிறப்பின் அடையாள அட்டையாகும். நமது பிறந்த நேரம், பிறந்த ஊர், பிறந்த தேதி மற்றும் கிழமை போன்ற நமது உயிரியல் விபரங்களை உள்ளடக்கியது. இதன் மூலம் நமது எதிர்காலத்தினை ஓரளவு முடிவு செய்ய இயலும். மிக துல்லியமான நமது வருங்காலத்தை அறிய மிக துல்லியமான நேரமும் துல்லியமான பிறந்த ஊருக்கு உண்டான அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை கணக்கீடுகள் தேவை படுகின்றது. ஒரு ஆயிரம் பேரில் ஒரு நூறு பேர் மட்டுமே துல்லியமான நேரம் மற்றும் பிறந்த ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை விபரங்களை கொண்டுள்ளனர் என்பதை எமது அனுபவ வாயிலாக அறியமுடிகிறது.

கடிகாரம் மற்றும் பல நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில்கூட சூரியனைக்கொண்டு மிக துல்லியமாக கணக்கீடுகளை செய்ய முடிந்தது. ஆனால் நவீன யுகத்தில் அறியாமை மற்றும் குழப்பங்கள் காரணமாக ஒரு ஐந்து அல்லது பத்து நிமிட வித்தியாசத்தில்தான் பிறந்த நேரம் சொல்வதை பார்க்க முடிகிறது. எமக்கு தெரிந்த ஜோதிடர்கள் ஒருவரின் பிறந்த நேரம் சொன்னால் அது ஆண் அல்லது பெண் என்று உறுதியாய் சொல்லும் அளவு கணிதத்தில் வல்லுனராக இருந்தனர்.

தற்போதைய காலத்தில் சோம்பேறித்தனம், கலையின் ஈடுபாடு குறைவு, முறையான கணிதம் செய்யாமை, அல்லது மாறுபட்ட கணிதம் செய்வது போன்றவற்றால், தற்போது மிக துல்லியமாக ஜாதகம் எழுதுபவர்கள் மிக குறைவே. இந்த விதமான குறைபாடை களைய கணினி முறை ஜாதகம் முன்வந்தது. மிக துல்லியமான கணிதத்துடன். ஆனால் அதிலும் ஒரு சில ஜோதிட மென்பொருட்கள் மட்டுமே பாரம்பரிய துல்லிய கணிதத்தினை கொண்டதாக உள்ளது.

உதாரணமாக தென் தமிழக பகுதியில், திருநெல்வேலி பாம்பு பஞ்சாங்கம், ஆற்காடு சீத்தாராம ஐயர் பஞ்சாங்கம் போன்றவை மிகுந்த பாரம்பரிய கணிதங்களை உள்ளடக்கியவை. அதாவது வாக்கிய பஞ்சாங்கம் மட்டுமே கணித துல்லியம் கொண்டது என்பதை அனுபவ பூர்வமாகவும், அவை வாக்கியத்தால் பிறந்தவை (ஞான திருஷ்டி ) என்றும், நவீன கால தொலை நோக்கி கருவிகள் இல்லாத கால கட்டத்தில் சித்தர்கள் மற்றும் பாரம்பரியம் கொண்ட, தெய்வ அருள் கொண்ட ரிஷிகளால் உருவாக்கப்பட்ட கணிதம் என்று உறுதியாக சொல்லலாம். இருப்பினும்

ஒரு ஜாதகர் பிறந்த நேர குழப்பம் இன்னும் தீரவில்லை, எப்படி என்றால்?:

1. ஒரு உயிர் ஒரு தாயின் கருவறையை விட்டு தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து கழுத்தை நீட்டினால் போதும் என்று நேரம் குறிப்பது.

2. ஒரு உயிர் ஒரு தாயின் கருவறையை விட்டு தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து முழுமையாக வெளியே வந்த பின் நேரம் குறிப்பது.

3. ஒரு உயிர் ஒரு தாயின் கருவறையை விட்டு தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து முழுமையாக வெளியே வந்த பின் தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள சரீர பந்தமான தொப்புள் கோடி அகற்றியதும் நேரம் குறிப்பது.

4. அல்லது குழந்தை பிறந்தும் சுவாசிக்காமல் இருக்கும் பட்சத்தில் அதன் இயக்கம் ஆரம்பித்த உடன் நேரம் குறிப்பது. (சில குழந்தைகள் பிறந்ததும் சுவாசிக்காமலும், இருதயம் இயங்காமலும் இருக்கும், அதாவது சில நொடிகள் அல்லது ஓரிரு நிமிடங்கள் – அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தை இயங்க செய்ய தலைகீழாக கட்டி, செயற்கை முறையில் குலுக்கியோ, செல்லமாக அடித்தோ இந்த பூமியின் காற்றை சுவாசிக்க செய்வது )

ஆக இப்படி எந்த நேரத்தை குறிப்பிடுவது என்ற குழப்பம் பலருக்கு உண்டு. எதோ பொத்தம் பொதுவாக ஒரு நேரத்தினை குறிப்பவர்களும் உண்டு. அனால் பாரம்பரிய ஜோதிடர்கள் (சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ) குழந்தை பிறப்பை மிகுந்த சிரத்தையுடன் குறிக்க உதவினார்கள். உதாரணம் – இவை மன்னர் ஆட்சிகாலங்களில் நடந்தது. இன்றும் ஓலை சுவடி ஜாதகங்களை பார்க்க இயலும். ஜோதிட துறைக்காக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இப்படி பட்ட பல ஜோதிட ஓலை சுவடிகளை காண முடியும்.

நமது முன்னோர்களால் தாம் மரணம் சந்திக்கும் நாள் நட்சத்திரம் மற்றும் திதி கிழமைகள் கூட சரியாக தாம் வாழும்போழுதே எழுதி வைத்து மரணித்தவர்களும் உண்டு. இதை அவர்கள் பிறந்த நேரம் துல்லியமாக கணித்ததால் அவர்களால் துல்லியமாக நடப்பு, நடந்தவை, நடக்க போகின்றவை என சரியாக பிரகடன படுத்த முடிந்தது. எவ்வாறு பிறந்த நேரம் குறிப்பது என்ற ரகசியம் இந்த ஜோதிட உலகில் ஒரு நிலைப்பாடான முடிவு இல்லாமல் உள்ளது.

ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் சத்தியமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் . எதோ ஜோதிட கலையில் சில கணிதங்களை கற்றுக்கொண்டு பலன் சொல்லுபவர்களாலும், என்னை போன்ற அரைவேக்காடு ஆர்வலர்களாலும். ஒரு மனிதனின் உண்மையான வாழ்நாள் பலனை துல்லியமாக கூற இயலாது. அடர்ந்த காடுபோன்ற வாழ்கை பாதையில் மங்கலாக தெரியும் ஒட்ட்ரையடிப்பாதைதான் ஜாதகம்.

அதாவது கோடு போட்டா உங்களுக்கு ரோடு போட்டுக்க தெரியணும். அப்பறம் நாங்கள் எதற்கு ஜோதிடம் சம்பந்த ஆராய்ச்சி கட்டுரை மற்றும் தகவல்களை எழுதறோம் அப்படின்னா நமது முன்னோர்கள் விட்டுப்போன மிச்சம் மீதி பாதுகாக்கணும் அப்படின்ற நல்ல எண்ணம்தான்.

அட்சரேகை தீர்க்க ரேகை கணக்கீட்டில் மானுட குறைபாடுகள்:

ஒரு ஜாதகதினை கணிக்கும்போது பிறந்த ஊர் மிக கட்டாயம் சரியாக இருக்க வேண்டும். பிறந்த ஊருக்கும் வாழும் ஊருக்கும் சம்பந்தமே இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் பிறந்த ஊரிலே வாழ்ந்து வருகிறார்கள். ஆக ஜாதகம் கணிக்கும்போது தான் ஜனித்த (பிறந்த ) ஊரை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் ஜோதிடர் அட்ச ரேகை தீர்க்க ரேகை கணக்குகளை சரியாக கணிக்க முடியும். மலேசியாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு நம்ம சென்னை வாழும் ஊரை குறிப்பிட்டு ஜாதகம் கணித்தால் கணிதம் தவறாக இருக்கும். நம்ம கோட்டம் பட்டியில் பிறந்துவிட்டு பெங்களூர் பிறந்த ஊர் என்று ஜோதிடரிடம் சொன்னால்ஜோதிட கணிப்பு தவறாகத்தான் முடியும்.

ஆக மிக துல்லியமாக ஒரு ஜாதக பலனை ஒரு துல்லியமான ஜாதகம் கொண்டு சொல்ல முடியும் என்றாலும் கூட தற்காலத்தில் அது கடினமே. ஏன் என்றால் பல சோதிடருக்கும், ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கும் ஜோதிட சூட்சும விஷயங்கள் தெரிவதில்லை.

எல்லாம் தெரிந்து விட்டால் இறைவனின் படைப்பும் பங்களிப்பும் எதற்கு? இறைவனை ஜோதிடம் மற்றும் ஜாதகம் மூலம் ஆராய்ந்து, நம் பிறப்பின் ரகசியத்தை அறிய சோதித்து பார்த்து தோற்றுப்போகவேண்டாம் என்பது இந்த ஜோதிட சிறுவனின் வேண்டுகோள்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com