இங்கு ஜோதிட அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வலை தளம் உபயோகமாக இருக்கும். இருப்பினும், சாமானியர்கள் எளிதில் புரிந்துகொள்ள படக்காட்சி மற்றும் விளக்க உரைகள் மூலம் அடிப்படை விஷயங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படும்.

முதலில் கிரகங்கள் பற்றிய அறிவு;

 

இந்த பேரண்டத்தில் பல கொடி கிரகங்கள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புகைப்படம் மற்றும் ஆராய்ச்சி துறைகள் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

இந்த பேரண்டம் ( Universe ) எண்ணில் அடங்கா சூரிய குடும்பங்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒரு சூரிய குடும்பத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து வருகின்றோம்.

ஆக நமது சூரிய குடும்பத்தில் ( Solar System ) மொத்தம் எழு கிரகங்கள், இரண்டு சாயா (நிழல்) கிரகங்கள் உள்ளன. ஆக மொத்தம் ஒன்பது கிரகங்கள் ( நவ கிரகங்கள் ) கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.

இந்த நவ கிரகங்கள் பன்னிரண்டு ராசி மண்டலங்களை சுற்றி வருகின்றது. இந்த ராசி மண்டலங்கள் இருபத்தி ஏழு நட்சத்திரங்களை கொண்டதாக உள்ளது.

ஒரு நட்சத்திரம் நான்கு பாவங்கள் (பாகங்கள்) என பிரிக்கப்படுகின்றது. முதல் பாதம், இரண்டாம் பாதம், என நான்கு பாதங்கள்.

ஒரு ராசி மண்டலத்திற்கு ஒன்பது நட்சத்திர பாதம். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்றால் ஒன்பது பாதங்களுக்கு சுமார் இரண்டு முழு நட்சத்திரங்களும் மூன்றாவது நட்சத்திரத்தில் சில பாதங்களும் அடங்கும். ஆக ஒரு ராசியில் ஒன்பது நட்சத்திர பாதங்கள் இருக்கும்.

ஒரு ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரம், பிறந்த ஊர், பிறந்த தேதி ஆகிய மூன்றையும் கொண்டு கணிக்கப்படுகின்றது.

ஒரு ஜாதகத்தின் பலன் சரியாக இருக்கவேண்டும் என்றால் மேல் கூறிய மூன்றும் துல்லியமாக இருக்க வேண்டும்.

இது ஜோதிடத்தின் அடிப்படை காரணிகள். விரிவாக இதன் தொடர்ச்சி இணைப்புகளில் காணலாம்.

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com