திருமணத் தடைகளை நீங்குவதற்கு பரிகாரம்

பெண்களுக்கு 
 
           பெண்களுக்கு காலகாலத்தில் திருமணம் ஆகாமல் தாமதப்பட்டுக் கொண்டிருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைப்பட்டு நின்றாலோ அத்தகைய பெண்கள் கிழ்க்கண்ட பொருட்களை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் குளித்து முடித்தபின் சேகரிக்க வேண்டும். 
 
 
மஞ்சள் -  7
பாக்கு -  7 
வெல்லம் - 7 
மஞ்சள் தடவப்பட்ட பூணூல் - 7 
மஞ்சள்  பூக்கள் -  7 
 கொண்டைகடலை - 70 கிராம் 
காசு ( நாணயம் )  -  7 
மஞ்சள் துணி -  70 செ. மீ 
 
          சேகரித்தப் பொருட்களை சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் இருக்கும் படம் அல்லது படத்தின் முன் வைத்து திருமணத்தடைகளை நீங்கி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்று மனதிற்குள் வேண்டிக் கொள்ள வேண்டும். மனதிற்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட தொகையை காணிக்கையாக அளிப்பதாக தெய்வத்திடம் தெரிவிக்க வேண்டும். பின் மேற்கண்ட பொருட்களையும், காணிக்கை தொகையையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி, யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் வைக்க வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் சிவனையும் பார்வதியையும் வழிபட்டுவர வேண்டும். அவ்வாறு வழிபடும் போது தன்னுடைய எண்ணம் நிறைவேற அருள் புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். 40 ம் நாள் காலையில் குளித்து முடித்த பின் சிவனும், பார்வதியும் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பின் மேற்கண்ட பொருட்களையும், காணிக்கையையும் கோயில் பூசாரிக்கு தானமாக கொடுத்துவிட வேண்டும். 
 
ஆண்களுக்கு 
 
                   காலாகாலத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் கிழ்க்கண்ட பொருட்களை ஒரு வெள்ளிக்கிழமையன்று காலையில் குளித்து முடித்த பின் சேகரிக்க வேண்டும். 
 
சந்தனக்கட்டிகள் - 7 
காசு (நாணயம் ) - 7 
கற்கண்டு - 7 
அரிசி - 70 கிராம் 
லவங்கம் - 7 
பூணூல் - 7 
வெள்ளை மலர் - 7 
வெள்ளைத் துணி - 70 செ. மீ. 
 
            சேகரித்தப் பொருட்களை சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் இருக்கும் படம் அல்லது படத்தின் முன் வைத்து திருமணத்தடைகள் நீங்கி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்று மனதிற்குள் வேண்டிக் கொள்ள வேண்டும். மனதிற்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட தொகையை காணிக்கையாக அளிப்பதாக தெய்வத்திடம் தெரிவிக்க வேண்டும். பின் மேற்கண்ட பொருட்களையும், காணிக்கை தொகையையும் ஒரு வெள்ளை  துணியில் கட்டி, யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் வைக்க வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் சிவனையும் பார்வதியையும் வழிபட்டுவர வேண்டும். அவ்வாறு வழிபடும் போது தன்னுடைய எண்ணம் நிறைவேற அருள் புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். 40 ம் நாள் காலையில் குளித்து முடித்த பின் சிவனும், பார்வதியும் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பின் மேற்கண்ட பொருட்களையும், காணிக்கையையும் கோயில் பூசாரிக்கு தானமாக கொடுத்துவிட வேண்டும். 

             இவ்வாறு முழு நம்பிக்கையுடன் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். 

அனைவருக்கும் திருமணம் நடக்க நாங்கள் வாழ்த்துகிறோம். 

வாழ்க வளமுடன் 
வாழ்க வையகம் 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com