மகரம் 

            

சமுதாயத்தில் நல்ல மதிப்போடு வாழ எண்ணுபவர்கள், தன் மனைவி, குழந்தைகளிடம் அதிகம் அன்பு வைப்பீர்கள். ஆனால் அதனை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டீர்கள். எவ்வளவு சிரமம் வந்தாலும் அதிக கவலைப்படமாட்டீர்கள். எதிலும் வாதாடும் மகர ராசிக்காரர்களே, நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

    இந்த ஆண்டில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்துகொண்டு அவர்களின் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவும். அது தக்க சமயத்தில் உதவும். இந்த ஆண்டு குருபகவான், உங்களின் ராசியைப் பார்க்கும் விதத்தில் சஞ்சரிப்பதால் ஆரோகியமான எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

     உங்களின் மனதில் சிலரது போக்கினால் வருத்தங்கள் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுகந்து உதவும் காலகட்டம் இது. சுதத்திரமாகச் சித்தித்துத் தனித்துச் செயல்படுவீர்கள். உங்களைவிட்டு எதிரிகள் விலகுவார்கள். புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள். சிலர் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள். வருமானம் பெருகும். இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். அதே நேரம் எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

     உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறக்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்து விடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

பரிகாரம்

பார்வதிதேவியை வழிபடுவது நல்லது. பெரியோர்களின் ஆசி வாங்கினால் மிக மிக நல்லது.பிரதி தினம் காலை விஷ்ணு சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் ஜபம் செய்துவந்தால் மனநிம்மதி கிடைக்கும்

வாழ்க வளமுடன் 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com