கன்னி 
      

 “பெரியோரிடம் மரியாதை சம்யோசித புத்தி, விடாமுயற்சியுடைய கன்னி ராசி நேயர்களே!அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

    இந்த வருடத்தில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதே நேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும், வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக் கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி குறிகோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை தானகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகிவிடும். அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.

     தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இதுநாள் வரை தேவையற்ற வீண்பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதை தவிர்த்துக் கொள்ளவும்.

    இந்த ஆண்டு உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னபிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்குக் குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன் மூலம் பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பரிகாரம்

தட்சணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடவும். பிரதி தினம் லிங்காஷ்டகம் ஜபித்து வரவும். எழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.

வாழ்க வளமுடன்

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com