மிதுனம்  

   வாக்கு சாதுர்யம், சமயோசித புத்தி, வியாபாரம் நோக்கம், அனைவரின் மேல் பிரியம்,கற்பனை சக்தி, கவர்ச்சியான பேச்சு, ஒரு சொல்லை பல சொல்லாக்கும் திறமை உடைய மிதுன ராசி நேயர்களே!   இந்த ஆண்டு, உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைக்கூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.

    ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குருபகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.  பங்குச் சந்தை முதலீடு போன்றவைகள்  மூலம் திடீர் பணவரவு உண்டாகும்.

     இந்த ஆண்டு தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுபகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசிக்காரர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள்.

     புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டைப் பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க 6ம் இடத்தில் சனிபகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் மீனாட்சி அம்மனை வழிபட நல்லது நடக்கும். பெருமாளையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

வாழ்க வளமுடன் 


"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com