ரிஷபம்

     அதிக பிரியம் , கஷ்டம் , உழைப்பு இல்லாமல் அனைத்தையும் அடையும் ஆசைகொண்ட ரிஷப நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாட்டின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழ வைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்து கொள்ளாவிட்டால் உங்களுக்குக் கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் பேசுவதில் வல்லவர் நீங்கள்.

     இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உங்களின் 7ம் ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். அவரால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த ராசி வாசகர்களில் சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன.

     உங்களின் வெளியூர் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரித்துச் செயல்களை பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு மற்றும் கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது.

      இந்த ஆண்டு உங்களின் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுபகவான் தனது 11ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்னை தோன்றும். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி பெரும்பாலான ரிஷபராசி நேயர்களுக்கு உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் 5ம் ராசியில் சஞ்சரிக்கும் ராகுபகவான் உங்களுக்குமனப் பக்குவத்தை தருவார். எனவே அதிகம் கவலைபடத்தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசகளில் ஈடுபடுவீர்கள்.

      வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

பரிகாரம்

திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும். பசுவிற்கு அகத்திகீரை,வைக்கோல் தானம் செய்யவும்.

வாழ்க வளமுடன் 


"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com