அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
 
 மூலவர்:ஆகாசபுரீஸ்வரர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:மங்களாம்பிகை
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:-
 ஆகமம்/பூஜை:-
 பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:-
 ஊர்:கடுவெளி
 மாவட்டம்:தஞ்சாவூர்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம். 
   
 தல சிறப்பு:
   
 பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி, இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு. 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். 
   
போன்:
   
 +91 96267 65472, 94434 47826 
   
 பொது தகவல்:
   
 

பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.

 
   
 
பிரார்த்தனை
   
 

பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

 
   
நேர்த்திக்கடன்:
   
 இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். 
   
 தலபெருமை:
   
 பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.
 
   
  தல வரலாறு:
   
 

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி, இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு.  
   
 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com