மீனம்

மீன லக்ன நேயர்களுக்கு,


 ♓ உங்கள் மீன லக்னத்திற்கு 2 ம் இடத்தில் குருவும் 3 ம் இடத்தில் கேதுவும் 7 ம் இடத்தில் சனியும் 9 ம் இடத்தில் ராகுவும் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் .இதுவரை தள்ளிப்போன காரியங்கள் சீக்கிரம் நிறைவேறும் .எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும் .கௌரவம் அந்தஸ்த்து .புகழ் எதிர்பாராத தனவரவு பொருள்வரவு கிடைக்க வாய்ப்பு அமையும் .குடும்பத்தில் புது வரவு ஏற்படும் .பேச்சில் சாமர்த்தியம் கூடும் .பேசுவதால் எழுவதால் வருமானம் பெயர்,புகழ் கிட்டும் ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் நல்ல படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படும் .கையில் பணபுழக்கம் இருந்து கொண்டே இருக்கும் .கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் .கொடுத்தப் பணம் தவணை முறையில் வந்து சேரும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் இருந்து கொண்டேயிருக்கும் .எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் சதா சிந்தனையில் இருந்து கொண்டேயிருக்கும் .


புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .புதிய நட்பு கிடைக்கப் பெறும்.அதனால் லாபம் ஏற்படும் .அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும் .அதனால் லாபமும் பணவரவும் பெயரும் புகழும் கூடும் .சகோதர சகோதிரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும் .உடன் பிறந்தவர்களுக்கு வேலை அல்லது அவர்களுக்கு சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் .ஒரு சிலருக்கு இடமாற்றம் ,மனைமாற்றம் ,ஊர்மாற்றம் ஏற்படும் .வேலையின் நிமித்தமாக வெளியூர் ,வெளிநாடு ,வெளிமாநிலங்கள் செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .நல்ல உணவுகளை விரும்பி உண்ண சந்தர்ப்பம் அமையும் .நேரத்திற்கு சாப்பிட சமயம் அமையும்.

வீடு,மனை,வண்டி வாகனங்கள்,விட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவும் ஒரு சிலர் கடன் வாங்கியும் காரியம் கைகூடும் .கேட்ட இடத்தில் பணவரவு அமையும் ஸ்காலர்ஷிப் அல்லது கல்வி உதவி கிடைக்க அல்லது கல்வி கடன் கிடைக்க வாய்ப்பு கிட்டும் .உயர் கல்வி பயில்வதில் சற்று கவனம் தேவை .இல்லையேல் சற்று கல்வி தடைபட்டுப் பின் கல்வி தொடர சந்தர்ப்பம் அமையும் .எதிர்பார்த்த மதிப்பெண்ணும் எதிர்பார்த்த கல்லூரியும் கிடைக்கும் என்றாலும் கடுமையானப் போராடியே வெற்றியை ஈட்டுதல் வேண்டும் .

இதுவரை வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் இனிதே நடந்தேறும் ,குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும்.குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும் .குழந்தைகள் வெளியூர் ,வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும் .காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி திருமணத்தில் முடியும் .இதுவரை தள்ளிப்போகும் விசா உடனே கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும் .எனவே பணத்தை முதலிடு செய்வதில் கவனம் தேவை .மேலும் சுய தொழில் புரிபவர்கள் ஓரளவு லாபம் அடைவர் .கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே அமையும் .யாருக்கும் பணம் கொடுப்பதில் மிக அதிக கவனம் தேவை .கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும் .அதே சமயம் மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவின் காரணமாக வைத்தியச் செலவுகள் செய்ய வாய்ப்பு அமையும் .

கொடுத்த பணம் திரும்ப தவணை முறையில் வந்து சேரும் .இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும் .மேலும் வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் .ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்,வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும் வேலையில் திருப்தியும் மன அமைதியும் ஒரு சிலருக்கு அமையும் .நிறைய கடன் சுப காரியங்களுக்காக வாங்க வண்டி வரும் .நண்பர்களால் எதிர்பார்த்த நட்பும் ஆதரவும் அமையும் . தந்தையாரால் ஆதரவும் தைமாமன்களால் எதிர்பாராத ஆதரவும் ஆதாயமும் ஒரு சிலருக்கு அமையும் .

உடலில் தலை கண்,மூக்கு ,நெஞ்சு ,அடிவயிறு இவற்றில் நோய்வராமல் பார்த்துக் கொள்ளவும் .குறிப்பாக சளித்தொல்லை இல்லாமல் உடலில் பேணுதல் வேண்டும் .இல்லையேல் தொடர்ச்சியாக நோய்க்கு ஆட்பட வேண்டிவரும் .

சிறுதொழில் சுயதொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் சினிமா,காலை ,இலக்கியம் இவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் .ஓட்டல் ,ரியல் எஸ்டேட் ஆடை,ஆபரணத் தொழில் புரிபவர்கள் லாபம் பெறுவர் .மருத்துவர்கள் ,பொறியாளர்கள் .போலீஸ் ,இராணுவம் ,உளவுத்துறையில் இருப்பவர்கள் நீதித்துறையில் இருப்பவர்கள் வங்கி மற்றும் கல்வித்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .

ஐ.டி துறையில் இருப்பவர்கள் ,அனிமேஷன் துறையில் இருப்பவர்கள் ஆடை,ஆபரண,அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்ப்பனையாளர்கள் தெருவோர நடைபாதை வியாபாரிகள் நற்பலன் அடைவர் .மருத்துவம்,இரசாயணம் ,தீப்பொட்டி ,வெடிமருந்து ,வெடி பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் விமான போக்குவரத்து வானியல் விஞ்ஞானிகள் ஏற்றம் பெறுவர் இரும்பு ,எஃகு சுரங்கத்தொழில் புரிபவர்கள் ,நிலக்கரி ,பெட்ரோல் ,டீசல் தொழிலில் இருப்பவர்கள் கவனமுடன் இருத்தல் வேண்டும் .விவசாயம் ,பால்,பால் பொருட்கள் ,காய்கறி ,பழம் ,பூ வியாபாரம் செய்பவர்கள் மீன்பிடித் தொழில் கப்பல் கட்டும் புரிபவர்கள் வேலையில் கவனம் தேவை.தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள் ,சமுக சேவகர்கள் ,சங்கம் நடத்துபவர்கள் சற்று கவனமாக இருத்தல் வேண்டும் .

பார்வதி தேவியை வணங்கி வருவதன் மூலமும் அல்லாவை நினைத்து வேண்டி வருவதன் மூலமும் நினைத்தது நிறைவேறும்.எதிர்பார்த்த நற்பலன்கள் நடந்தேறும் .

 

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com