கும்பம்

கும்ப லக்ன நேயர்களுக்கு,

 â™’

உங்கள் கும்ப லக்னத்திற்கு 3 ம் இடத்தில் குருவும் செவ்வாயும் 4 ம் இடத்தில் கேதுவும் 8 ம் இடத்தில் சனியும் 10 ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பது தாங்கள் நினைத்த காரியம் கைகூடிவரும் .இதுவரை எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சாதகமாக வந்து சேரும் இருப்பினும் எதற்கும் கடுமையாகப் போராடியே வெற்றிபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.



பேச்சில் ஆர்வம் கூடும் .ஆரம்பக்கல்வி பயிலுபவர்கள் எதிர்பார்த்த கல்வி அமையும் .பேசுவதன் மூலமும் எழுதுவதன் மூலமும் ஓரளவு லாபம் அடைய நேரிடும் .பழைய பொருட்களைக் கொடுத்து புதிய பொருட்கள் வாங்க நேரிடும் .ஆடை,ஆபரணச் சேர்க்கை ஏற்படும் .ஒரு சிலருக்கு வீடு,மனை ,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் .கேட்ட இடத்தில் கடன் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படும் .ஆடம்பரமான வீடு,வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும் .ஒரு சிலருக்கு அடுக்கு மாடி குடியிருப்பிலும் ஒரு சிலர் தனி வீடாகவும் வாங்க வாய்ப்பு அமையும் .கையில் பணம் தாராளமாகப் புரளும் .அதே சமயம் அது போகும் விழியும் தெரியாமலே போய் கொண்டிருக்கும்.

தைரியமாக எதிலும் ஈடுபட்டுப் பின் பின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .எனவே எதிலும் ஈடுபடுவதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து இறங்கவும் .அதே சமயம் புதிய விஷயங்களைக் கற்பதிலும் படிப்பதிலும் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் உடன் பிறந்தவர்களால் ஆதாயமும் அதே சமயம் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .இல்லையேல் உறவினர்களால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அமையும் .புதிய நட்பு வட்டம் சாதகமாக வந்து சேர்வார்கள் .அவர்களால் நற்பலன் ஏற்படும் .அதே சமயம் நண்பர்களால் நன்மை ஏற்படும் .எழுவதில், கலைத்துறையில் ,நடிப்பில் பெயர் ,புகழ் ,வருமானம் அமைய சந்தர்ப்பம் கூடிவரும் .புதிய கல்வி பயிலுவதில் ஆர்வமும் நல்ல கல்வியும் நல்ல மதிப்பெண் பெறவும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் .ஒரு சிலருக்கு எதிர்பார்த்த கல்லூரியும் படிப்பும் ஒரு சிலருக்கு எதிர்பாராத கல்லூரியும் படிப்பும் அமைய சந்தர்ப்பம் ஏற்படும் .ஒரு சிலருக்கு தாயாரின் அனுப்பும் ஆதரவும் நன்கு கிடைக்கும் .அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஓரளவு எதிர்பார்த்த விலைக்கே விற்க முடியும் .நல்ல லாபம் ஈட்ட முடியாது எனவே பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தேவைக்கேற்ற உற்பத்தி செய்யவும் .

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தெய்வ அனுகூலத்துடன் தொடர் மருத்துவ சிகிச்சையும் எடுத்தால் நலம் .ஒரு சிலருக்கு குழந்தைகளால் மன வருத்தமும் வேதனையும் அவமானங்களும் ஏற்படும் .விசா கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும் .காதல் விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .இல்லையேல் காதலில் மனக்கசப்பும் போராட்டங்களும் மனவேதனையும் பிரிவும் பிரச்சனையும் ஏற்படும் .பங்குச் சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்தல் கூடாது லாபம் குறைவாகவே இருக்கும் .கேளிக்கை ,வேடிக்கை வினோதங்களில் மனம் லயிக்கும் .விளையாட்டு ,சினிமா போன்ற துறையில் இருப்பவர்கள் கவனம் தேவை .சின்னத்திரை இருப்பவர்கள் கலைஞர்கள் கவனமுடன் இருத்தல் வேண்டும் .யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது .பணம் கொடுத்தால் திரும்ப பணம் வராது .நட்பு கெடுமே தவிர பலன் பெரிய அளவில் இராது . வேலையில் கவனம் தேவை .அடிக்கடி லீவு எடுப்பதோ அல்லது அடிக்கடி கம்பெனி மாறுவதோ கூடாது .மாறினால் எதிர்பார்த்த லாபம் இராது .உத்யோகத்திலும் பணிபுரியும் இடத்திலும் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவில் இராது .புதிய ப்ராஜ்டங்களை ஏற்பதிலும் அதில் வேலை செய்வதிலும் மிகவும் கவனம் தேவை .சக ஊழியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் சற்று கவனமுடன் நடத்தல் வேண்டும் .உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் .எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தல் நலம் .

ஒரு சிலருக்கு எதிர்பாராத தனவரவு அதாவது கணவன் அல்லது மனைவி அல்லது முன்னோர்களது சொத்துக்கள் அல்லது அவர்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு அமையும் .உடலில் கண்,காது ,முதுகுத்தாண்டு,அடிவயிறு ,கால் போன்ற இடங்களில் நோய் ஏற்பட்டு விலகும் மேலும் நோய் ஏற்பட்டாலும் குணமுடைய சற்று கால தாமதம் ஆகும் .

ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் கமிஷன் ,ஏஜென்ட்கள் ஏற்றம் பெறுவர் .விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள் ஓரளவு லாபம் அடைவர் தங்கம் ,வெள்ளி ,அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை செய்பவர்கள் லாபம் பெறுவர் .மீன்பிடித்தொழில் புரிபவர்கள் பால் மற்றும் பூ,பழம் வியாபாரம் செய்பவர்கள் ஏற்றம் பெறுவர்.

மருத்துவர்கள் குறிப்பாக சித்தா ஓமியோபதி அக்குபஞ்சர் தொழில் புரிபவர்கள் தொழிலில் மிகவும் கவனம் தேவை .இரும்பு ,எஃகு ,சிமெண்ட் ,நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் இரசாயணம் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தியாளர்கள் ,விற்பனையாளர்கள்  ஆரம்பத்தில் லாபமும் இறுதியில் நஷ்டமும் அடைவர் .சமுக சேகவர்கள் ,தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள் .ஐ.டி துறையில் இருப்பவர்கள் ,விஞ்ஞானிகள் ,ஆராயிச்சியாளர்கள் தொழிலில் மிக அதிக கவனம் தேவை .பொலிவே,இராணுவம் ,இரகசிய உளவுப்பிரிவில் இருப்பவர்கள் நல்ல பெயர் எடுப்பார் .வெளிநாட்டுத் தூதர்கள்.நிதி,நீதித்துறையில் இருப்பவர்கள் வங்கி மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேலையில் மிகவும் கவனம் தேவை .

ஸ்ரீ மகா விஷ்ணுவையும் அன்னை வேளாங்கண்ணி மாதாவையும் வணங்கி வர கேடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் .

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com