மகரம்

மகர லக்ன நேயர்களுக்கு,

 ♑ மகர லக்னத்திற்கு 4 ம் இடத்தில் செவ்வாயும் குருவும் 5 ம் இடத்தில் கேதுவும் 9 ம் இடத்தில் சனியும் 11 ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பது உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் தரும் .இதுவரை வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் .எடுத்த காரியங்களில் வெற்றியடைய போராடி ஜெயிக்க வேண்டியது வரும் .பேச்சில் இனிமை கூடும் .அதே சமயம் அனைவரிடமும் கவனமாகப் பேசுதல் வேண்டும் .பேசுவதன் மூலமும் எழுதுவதன் மூலமும் நல்ல வருமானம் அமைய வாய்ப்பு அமையும் .இடம்,மனை,பொருள்,வீடு ,வேண்டி வாகனங்கள் ஆடை,ஆபரணச் சேர்க்கை ஏற்படும் .யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது .கடன் கொடுத்தால் திரும்ப வருவதில் காலதாமதம் ஆகும் .யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதும் வெற்றுப் பத்திரம் அல்லது செக் அல்லது பேப்பரில் கையெழுத்து இடுவதும் கூடாது .தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது .

எப்பொழுதும் சுறுசுறுப்பும் உழைப்பும் உடையவர்களாக இருப்பீர்கள் .வேலையின் நிமித்தமாக தொழிலின் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும் .ஒரு சிலர் அலைந்து திரிந்து செயல்பட வேண்டியது வரும் .அதனால் ஆதாயமும் பொருள்வரவும் அமையும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் புதிய கலைகளில் ஆர்வமும் புதிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள் .ஒரு சிலருக்கு இடமாற்றம் ,மனைமாற்றம் ,வீடுமாற்றம் ஏற்படும் .வெளியூர்,வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும் .சகோதர ,சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும் .உடன் பிறப்புகளுக்கு இதுவரை தள்ளிப்போன சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .ஒரு சிலரின் உடன் பிறப்புகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவும் வாய்ப்பு அமையும் .ஒரு சிலருக்கு உடன் பிறப்புகளால் செலவுகள் அல்லது உறவினர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு அமையும் .

சுய தொழில் சார்ந்த அதாவது பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்யாமல் குறைந்த அளவில் உற்பத்தி செய்வது சிறப்பாகும் .கல்வியில் கவனம் செலுத்துதல் வேண்டும் .உயர் கல்வி பயில்பவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் எதிர்பார்த்த கல்லூரி அமைவது சற்று சிரமம் ஆகும் .எனவே கவனத்துடன் படித்தல் வேண்டும் .உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .உடலில் நோய் ஏற்பட்டாலும் விலகி விடும் .தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும் .நண்பர்களால் பிரச்சனைகளும் மனக்கசப்புகளும் அமைய சந்தர்ப்பம் அமையும் .அதற்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும் .

பங்குசந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்தல் கூடாது .எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் .கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சற்று சிரமம் ஏற்பட்டாலும் பின்னால் பெயர் ,புகழ் பெறுவர் .நல்ல செல்வம் ,செல்வாக்குடன் விளங்குவர் .அரசியலில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .பொது வாழ்கையில் இருப்பவர்கள் சமுக ஆர்வலர்கள் .சங்கம் நடத்துபவர்கள் .தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள் ஓரளவு நற்பலன் அடைவர் .ஆன்மீக வழியில் இருப்பவர்கள் தெய்வ அனுகூலத்தைக் கூட்டுதல் வேண்டும் .மத குருமார்கள் ,ஆசார்யர்கள் ,ஜோதிடர்கள்  பெயர் புகழ் பெறுவர் .காதல் விஷயங்களில் மிகவும் கவனம் தேவை .அதில் நிறையப் பிரச்சனைகள் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும் .ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் .அடிக்கடி கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்ள ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தெய்வ அனுகூலத்தைக் கூட்ட பரிகாரம் செய்யவும் .மேலும் தொடர் மருத்துவ சிகிச்சையும் ஏத்தல் வேண்டும் .ஒரு சிலருக்கு குழந்தைகளால் மன அமைதியும் நிம்மதியும் கெடும் .ஒரு சிலரது குழந்தைகளுக்கு வெளிநாடு செல்லவும் இதுவரை வராமல் இருந்த விசா கிடைக்கவும் வாய்ப்பு அமையும் .

வேலையில் மிக அதிக கவனம் தேவை .வேறு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் மட்டுமே பார்க்கும் வேலையை விட வேண்டும் .இல்லையேல் கம்பெனி மாறுவதைப் பற்றி மிகவும் கவனித்து முடிவு செய்தல் வேண்டும் .ஏனெனில் அடுத்த வேலை கிடைக்க சற்று காலதாமதம் ஆகும்.நண்பர்களிடமும் மேலதிகாரிகளிடமும் கவனமாகப் பேசிப் பழகுதல் வேண்டும் .வேலையில் திருப்தியில்லாமலும் அல்லது அவர்களுக்கு நம்மைப் பிடிக்காமலும் போய்விடக்கூடும் .எனவே பற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுதல் கூடாது .போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாகச் சென்று வரவும் .பெண்கள் விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை .எப்பொழுதும் எவ்விஷயத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும் .

ஓட்டல்,தகவல்தொடர்பு ,போக்குவரத்து ,கமிஷன் ,ஏஜென்ஸி,புரோக்கர்ஸ் ,ஐ.டி துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .மேலும் இரும்பு,எக்கு சிமெண்ட் ,உருக்கு ஆலையில் பணிபுரிபவர்கள் தீப்பொட்டி ,வெடிமருந்து ,வெடிபொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கவனமுடன் இருத்தல் வேண்டும் ,விவசாயம் ,பால் பொருட்கள் ,பால் வண்டி ,கால்நடை வளர்ப்போர் ,வீட்டு வளர்ப்பு பிராணி வளர்ப்போர் .காய்கறி,பழம்,பூ வியாபாரம் செய்வோர் ஓரளவு லாபம் அடைவர் .சிறு வியாபாரிகள் குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள்   சற்று கவனம் தேவை .மருத்துவர்கள் ,பொறியாளர்கள்,போலீஸ்,இராணுவம் ,அணு விஞ்ஞானிகள் ,கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் ,கப்பல்,விமானம் போக்குவரத்தில் இருப்பவர்கள் வேலையில் மிக அதிக கவனம் தேவை .அடிக்கடி லீவு எடுப்பதும் வேலையை மாற்றுவது என்ற எண்ணத்தையும் கைவிடுதல் வேண்டும் .கிடைத்த வேலையை அல்லது பார்க்கும் வேலையை முழுத் திருப்தியுடன் செய்து வரவும் .

ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்கு வருவதன் மூலமும்  .பெண் தெய்வங்களை வணங்கி வருவதன் மூலமும் எதிர்பார்த்த நற்பலன்கள் அடைய சந்தர்ப்பம் அமையும் .

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com